Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... மார்கழி உற்சவம்: சக்தி மாரியம்மன் கோயிலில் பிரம்மாண்ட கோலம் மார்கழி உற்சவம்: சக்தி மாரியம்மன் ...
முதல் பக்கம் » செய்திகள்
பக்தி யோகம் தானாக வாய்க்க வேண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
எழுத்தின் அளவு:
பக்தி யோகம் தானாக வாய்க்க வேண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

பதிவு செய்த நாள்

26 டிச
2025
05:12

 புதுச்சேரி:  முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடைபெற்று வரும் மார்கழி மாத உற்சவத்தில், 11ம் நாளான இன்று ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம்  நிகழ்த்திய உபன்யாசம்:


பொதுவாகவே, இலக்கியங்களில் ஆசாரியனை மயிலுடன் ஒப்பிடுவர். புழுபூச்சிகள் மயிலின் அருகில் செல்லாதது போல, தீய எண்ணங்கள் ஆசார்யனை அண்டுவதில்லை. மயில் தனது இறகை அவ்வளவு சீக்கிரம் இழக்காது. அது போல, ஆசார்யனும், தனது ஞானச் சுற்றத்திலிருந்து வெளி வந்தாலும், தகுதியறிந்தே ஒருவனை சீடனாக ஏற்பார். மயிலுக்கு மேகம் பிடிக்கும். ஆசார்யனுக்கு கார்முகில் வண்ணனைப் பிடிக்கும். பக்தி, ஞானம், வைராக்கியம் என்ற மூன்றில் பக்திக்கே உயர்வான இடம் வைணவத்தில் வழங்கப்பட்டுள்ளது. கர்மம், ஞானம் இன்னபிற யோகங்கள் பெறப்படுபவை. ஆனால் பக்தி யோகம், தானாக வாய்க்க வேண்டும். நீர் வடிவம் இல்லாதது. எந்த கொள்கலனில் சேர்க்கப்படுகின்றதோ, அதற்கேற்ப வடிவம் பெறும்.  அதே போன்றே, நீர் வண்ணனாகிய நாரணனும் எதில் கொள்ளப்படுகின்றானோ அந்த பாத்திரத்தின் வடிவத்தைப் பெற்று விடுவான். மீனாக, ஆமையாக, வராஹமாக, நரசிம்மமாக, வாமனனாக, முடிவிலியாக, மனிதனாக, ராம, பலராம, பரசுராம, கண்ணனாக என்று ஏற்ற கலங்களை எதிர் கொண்டவன் நாராயணன். ஆகவே தான் எம்பெருமானை முகில் வண்ணன் என்று சொல்லி உள்ளாள். நீருக்குள் எதுவும் அடங்கி விடும். அதே போல் புண்யாத்மா - பாபாத்மா என்று பேதம் இல்லாமல் சேதன அசேதனங்கள் அனைத்தும், அவரவர் விதிவகை நாராயணனிடம் லயமாகி விடுவர். வினைப் பயனால், அது ஒரு பிறவியோ ஓராயிரம் பிறவியோ. இறுதியில் லயமாவது ஸ்ரீமந் நாரயணனிடம் தான். எனவே கண்ணனை நினையாத மனமும், கண்ணனுக்காக உருகாத உள்ளமும், கண்ணனுக்காக ஒழிக்காத ஆசையும் எதற்கு? என்று தெளிந்து, நம் உள்ளத்தில் கொண்டால், வண்ணன் நம் மனமாகிய கோவிலில் குடியேறுவான்’ என்றார். உபன்யாசம் நேரம்  மார்கழி மாத உபன்யாசம் வரும் 14ம் தேதி வரை தினசரி காலை 6:00 முதல் 7:00 மணி வரை நடைபெறும்.

 
மேலும் செய்திகள் »
temple news
புதுச்சேரி: எல்லைப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் ஸ்ரீமத் பாகவாத புராண உபன்யாசம் நேற்று ... மேலும்
 
temple news
சென்னை: மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சியாக, சென்னை அமைந்தகரை அய்யாவு மஹாலில், நாராயணீயம் சிறப்பு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் கோயில் முன்பு மார்கழி மாத உற்சவத்தையொட்டி ... மேலும்
 
temple news
நிஷா ராஜகோபால், முதல் நாள் மாலை 4:00 மணிக்கு பார்த்தசாரதி ஸ்வாமி சபா கச்சேரியிலும், மறுநாள் காலை 6:00 மணிக்கு ... மேலும்
 
temple news
திருவல்லிக்கேணி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் வைகுண்ட ஏகாதேசி பகல் பத்து திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar