புதுச்சேரி: எல்லைப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் ஸ்ரீமத் பாகவாத புராண உபன்யாசம் நேற்று துவங்கியது.
புதுச்சேரி ராமானுஜர் பரபக்தி இயக்கம் சார்பில், எல்லைப் பிள்ளைச்சாவடி சிருங்கேரி மடம், சாரதாம்பாள் கோவில் மார்கழி மகோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று முதல் வரும் 1ம் தேதி வரை தென்திருப்பேரை அரவிந்தலோசனன் ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாசம் நடக்கிறது. அதில், முதல் நாளான நேற்று தென்திருப்பேரை அரவிந்தலோசனன் சுவாமி, பாகவத புராண வைபவத்தையும் பரீட்சித்து மகாராஜன் பிறப்பு பற்றி உபன்யாசம் செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று 27ம் தேதிவராகப் பெருமாள் அவதாரம் குறித்தும், நாளை 28ம் தேதி நரசிங்கப் பெருமாள் சரித்திரத்தையும், 29ம் தேதி கிருஷ்ண அவதாரத்தையும், 30ம் தேதி ருக்மணி கல்யாணம் குறித்து உபன்யாசம் செய்கிறார்.