Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : ஆங்கில புத்தாண்டுப் ... சிம்மம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026 சிம்மம் : ஆங்கில புத்தாண்டுப் ...
முதல் பக்கம் » 2026 வருட ராசி பலன்
கடகம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026
எழுத்தின் அளவு:
கடகம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026

பதிவு செய்த நாள்

27 டிச
2025
03:12

புனர்பூசம்: முயற்சியால் முன்னேற்றம்


ஞானக் காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.


பிறக்கும் 2026 ம் ஆண்டில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழில் முன்னேற்றமடையும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களின் நிலை உயரும். 4 ம் பாதத்தினருக்கு மனதில் இருந்த பயம் போகும். குடும்பம், வியாபாரம், வேலை, வருமானத்தில் நெருக்கடி தீரும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.


சனி சஞ்சாரம்

1,2,3 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை நினைத்தது நடக்கும். சொத்து, சுகம், பட்டம், பதவி என்ற கனவு நனவாகும். அதன்பின் கவனமாகவும் நேர்மையாகவும் செயல்படுவீர்கள். செலவு அதிகரிக்கும்.  தாயாரின் நிலையில் பாதகம் ஏற்படும். 4 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை அஷ்டமச்சனியாக சஞ்சரித்து சங்கடம் தந்தாலும், அதன்பின் பாக்ய சனியாக முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். செல்வ செழிப்புடன் வாழும் நிலை உருவாகும். 


ராகு, கேது சஞ்சாரம் 

1,2,3 ம் பாதத்தில் பிறந்தவருக்கு நவ.13 வரை பாக்கிய ராகு, சகாய கேதுவால் நினைத்தது நிறைவேறும். அதன்பிறகு அனைத்திலும் கவனம் தேவை. 4 ம் பாதத்தினருக்கு சில சோதனை உருவாகும். உழைப்பு, முயற்சியால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பம், பண விவகாரத்தில் நெருக்கடி வரலாம். 


குரு சஞ்சாரம்

மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக  செல்வதால், 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 17 முதல் அலைச்சல், சிலருக்கு இட மாற்றம், செலவு அதிகரிக்கும். அதற்கேற்ப வருமானம் உயரும். வீடு, வாகனம், திருமணம், குழந்தை பாக்கியம் என கனவு நனவாகும். மே 26 முதல் குடும்பத்தில் நிம்மதி, பணப்புழக்கம் கூடும். வேலை, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தகுதியான வேலை கிடைக்கும். அக்.20 முதல் தைரியமாக செயல்பட வைத்து தன்னம்பிக்கையை அதிகரிப்பார். திருமணம், சொந்த வீடு, வருமானம், பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். 4 ம் பாதத்தினருக்கு மார்ச் 17 முதல் செலவு, நிம்மதியற்ற நிலை ஏற்பட்டாலும் தேவைக்கேற்ப வருமானம் வரும். மே 26 முதல் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். திருமணம், குழந்தை, வீடு என கனவுகள் நனவாகும்.  அக். 20 முதல் குடும்பத்தில் நிம்மதி, தம்பதி ஒற்றுமை, வழக்கில் வெற்றி,  திடீர் அதிர்ஷ்டம், வேலை, தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.


சூரிய சஞ்சாரம்

புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 15 – மே 14 காலத்திலும், ஆக.18 – செப்.17, நவ. 17 – டிச.15 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு, ஜன.1 – 14, ஏப்.14 – ஜூன் 14 காலத்திலும், செப்.18 – அக்.17, டிச.16 – 31 காலங்களிலும் சூரியன் அதிர்ஷ்ட வாய்ப்புகளை தருவார். வேலை, தொழிலில் முன்னேற்றம் தருவார்.  முயற்சிகளை வெற்றியாக்குவார். நோய், வழக்கில் இருந்து பாதுகாப்பார். எதிர்பார்ப்பு நிறைவேறும்.  அரசுவழியில் ஆதாயம் வரும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். 


பொதுப்பலன் 

உங்கள் முயற்சிக்கேற்ப ஆதாயம் உண்டாகும்.  நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி இருக்கும். வியாபாரம், தொழிலில் தடைகள் விலகும். தேவைக்கேற்ற பணம் வரும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். செல்வாக்கு உண்டாகும்.


தொழில் 

தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி, மொபைல், ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், தொழிற்சாலை,  டிராவல்ஸ், குடிநீர், விவசாயம், ஜூவல்லரி, கமிஷன் ஏஜன்சி தொழில்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள் 

உழைப்பிற்கேற்ற மதிப்பும், ஊதியமும் உயரும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் வேறு இடத்திற்கு செல்லும் நிலை ஏற்படும். தற்காலிக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.


பெண்கள் 

படிப்பு, திருமணம், வேலை, குழந்தை பாக்கியம் என்ற எதிர்பார்ப்பு, விருப்பம் நிறைவேறும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை மறையும்.  உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்ல முடியும். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. 


கல்வி 

படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. பொழுது போக்குக்கு  இடமளிக்காமல், விளையாட்டை தவிர்த்து ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதும், படிப்பில் கவனம் செலுத்துவதும் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்க வழிவகுக்கும். 


உடல்நிலை 

உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருந்து, மாத்திரை செலவுகள் கட்டுப்படும். பரம்பரை நோய், தொற்று நோய் என அவதிப்பட்ட நிலை மாறும்.


குடும்பம் 

சொந்த இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சேமிப்பு உயரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். உறவுகளின் மத்தியில் செல்வாக்கு உயரும்


பரிகாரம் : ஆலங்குடி குருவை வழிபட வாழ்வில் நன்மை அதிகரிக்கும். 


பூசம்; தடைகள் விலகும்


கர்மக்காரகனான சனி, மனக்காரகனான சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026 யோகமான ஆண்டாகும். உங்களுக்கிருந்த போராட்ட நிலை மாறும். எந்த வேலையில் இறங்கினாலும் அங்கே பிரச்னை, நெருக்கடி, அவமானம் என்றிருந்த நிலை மாறும். உடல்நிலை பாதிப்பு நீங்கும். நினைத்ததை சாதித்து முடிக்க முடியும். பொருளாதார நிலை உயரும். குடும்பம், வியாபாரம், தொழில் வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.


சனி சஞ்சாரம் 

கடந்த இரண்டரை ஆண்டாக அஷ்டமச்சனியாக சஞ்சரித்து நெருக்கடி வழங்கி, எல்லாவற்றிலும் போராட்டம் பிரச்னை என்ற நிலைக்கு உங்களை ஆளாக்கியவர், மார்ச் 3 முதல் பாக்கிய ஸ்தானத்திற்கு செல்கிறார். பன்னிரு ராசிகளில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் அவர் யோக சனியாக மாறி, பார்க்கும் இடங்களுக்கும் பலன் தந்து முன்னேற்றம் தருவார் என்பதால், முதலில் உடல்நிலை சீராகும். நினைத்த வேலை தடையின்றி நடக்கும். எதையும் சாதிக்கும் நிலை உண்டாகும். வம்பு, வழக்கு என்ற நிலை மாறும். முடங்கிய தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் பல வழியிலும் வரும். பெரியோர் ஆதரவும், தெய்வ அனுகூலமும் உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த இடம், வீடு என்ற ஆசை நிறைவேறும். செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள். 


ராகு, கேது சஞ்சாரம் 

நவ.13 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வார்த்தைகளால் பிரச்னைகளை சந்திக்க நேரும்.  குடும்பத்தில் ஏதேனும் சலசலப்பு இருந்து கொண்டிருக்கும். சிலருக்கு குடும்பத்துடன் இடைவெளி ஏற்படும். பண விவகாரத்தில் சங்கடம் ஏற்படும். எந்த ஒன்றிலும் சிந்திக்காமல் செயல்பட்டு சங்கடத்திற்கு ஆளாக நேரும். திடீர் வாய்ப்பு தேடிவரும். வசதியாக வாழும் நிலை உருவாகும். நவ.13 முதல் எதிலும் யோசித்து செயல்படுவதும், அமைதி காப்பதும் அவசியம்.


குரு சஞ்சாரம்

மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக செல்வதால் மார்ச் 17 முதல் விரய குருவாக சஞ்சரித்து செலவை அதிகரித்தாலும், புதிய வாகனம், சொத்து, உடல்நிலையில் முன்னேற்றம், எதிர்பாராத வருமானம், வழக்கில் வெற்றி, வியாபாரம், தொழில், வேலையில் முன்னேற்றம் ஏற்படுத்துவார். மே 26 முதல் ஜென்ம குருவாக சஞ்சரித்து எதிர்பாராத இடமாற்றம், குடும்பத்தை விட்டு விலகி இருக்கும் நிலையை உண்டாக்கினாலும், வருமானத்தை அதிகரிப்பார். திருமணம், குழந்தை, வீடு என கனவை நனவாக்குவார். அக்.20 முதல் குடும்ப குருவாக சஞ்சரிப்பவர் வேலையின் காரணமாக பிரிந்த தம்பதியை சேர வாழ வகுப்பார்.  குடும்பத்தில் நிம்மதி நிலவும்.  உடல் ஆரோக்கியம், வழக்கில் வெற்றி, திடீர் அதிர்ஷ்டம், வேலை, தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். சிலருக்கு தகுதியான வேலை கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சித்து வந்தவர்களின் முயற்சியை வெற்றியாக்குவார்.


சூரிய சஞ்சாரம் 

ஜன. 1 – 14, ஏப். 14 – ஜூன். 14 மற்றும் செப். 18 – அக். 17, டிச. 16 – 31 காலங்களில் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் உங்களுக்கேற்பட்ட சங்கடங்களை நீக்குவார். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். எந்த நிலையையும் சமாளித்திடக்கூடிய நிலையை உண்டாக்குவார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார். அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்போர் செல்வாக்கை உயர்த்துவார். வியாபாரம், தொழிலில் லாபத்தை அதிகரிப்பார்.


பொதுப்பலன் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு கட்டுமரமும், கப்பலும் கிடைத்ததுபோல் உங்கள் நிலை மாறும். இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்த்த வருமானம் வரும். செல்வத்தோடு சந்தோஷமும் செல்வாக்கும் உண்டாகும்.


தொழில் 

தொழில் காரகன் பாக்ய ஸ்தானம் செல்வதால் செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.  புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிற்சாலை, வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு, வாகன விற்பனை, ஐ.டி, வெளிநாட்டு வர்த்தகம், டிராவல்ஸ், குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் வியாபாரம், ஹார்ட்வேர், ஜூவல்லரி தொழில்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள் 

பொறுமையுடன் எல்லாவற்றையும் சமாளித்து வந்த உங்களுக்கு 2026 யோகமான ஆண்டாகும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்து வந்தவர்களுக்கு வேலையில் ஏற்பட்ட பயம் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.


பெண்கள் 

படிப்பில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். புதிய வாகனம் வாங்க முடியும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். மே26 க்கு வயதினருக்கு திருமணம், குழந்தை பாக்யம், புதிய வீடு, குடும்பத்தில் மரியாதை ஏற்படும். அக். 20 முதல் செய்துவரும் தொழிலில் ஆதாயம், வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.


கல்வி மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை ஏற்படும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.


உடல்நிலை 

கடந்த இரண்டரை ஆண்டாக இருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். விபத்து, தொற்று நோய், பரம்பரை நோய் என மருத்துவமனைக்கு சென்ற வநத் நிலை மாறும். ஆரோக்கியமாக நடை ந்க்கூடிய நிலை உண்டாகும்.


குடும்பம் 

மற்றவரைப்போல் வாழ முடியவில்லை, போதுமான வருமானம் இல்லை, சொந்த வீடு இல்லை, வாகனம் இல்லை என கவலைப்படுவோருக்கு 2026 முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தம்பதிக்குள் ஒற்றுமை நிலவும்.  பொருளாதார நிலை உயரும். சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.


பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் தீரும். வேண்டுதல் நிறைவேறும்.


ஆயில்யம்: செல்வாக்கு உயரும்


வித்யாகாரகனான புதன், மனக்காரகனான சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026  முன்னேற்றமான ஆண்டு. உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் கனவு நனவாகும். புதிய முயற்சி வெற்றியாகும். வருமானமும், வாழ்க்கை நிலையும் உயரும். ஆரோக்யம் சீராகும். புதிய வீடு, வாகனம் விருப்பப்படி அமையும். தொழில் லாபம் தரும். நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். பொருளாதாரம் உயரும். 


சனி சஞ்சாரம் 

மார்ச் 6 முதல் பாக்கிய சனியாக சஞ்சரிப்பதால் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடந்தேறும். உடல்நிலை சீராகும். எதையும் சாதிக்கும் நிலை உண்டாகும். வம்பு, வழக்கு என்றிருந்த நிலை மாறும்.  தொழில் முன்னேற்றமடையும். வருமானம் பலவழியிலும் வரும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். பட்டம் பதவி, செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழும் நிலை ஏற்படும்.


ராகு, கேது சஞ்சாரம் 

நவ.13 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. வரவு செலவில் கவனமாக இருப்பதும், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் நன்மை தரும். புதிய முயற்சி, உடல்நிலையில் அக்கறை தேவை. பணியாளர்கள் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாக வாய்ப்பிருப்பதால் வேலையில் தவறுக்கு இடம் தராமல் செயல்படுவது அவசியம். வியாபாரிகள் பொறுப்பை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வதால் எதிர்பார்த்த லாபத்தை காண முடியும். நவ.13 முதல் நட்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பதுடன் கூட்டுத்தொழிலில் கவனமாக இருப்பது அவசியம்.


குரு சஞ்சாரம்

மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக  சஞ்சரிப்பதால், மார்ச் 17 முதல் விரய குருவாக சஞ்சரித்து வரவை விட செலவை அதிகரிப்பார்.  நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். புதிய வாகனம் வாங்கலாம்.  உடல்பாதிப்பு மறையும். எதிர்பாராத வருமானம் வரும். வழக்கு சாதகமாகும். வியாபாரம், தொழில், வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மே 26 முதல் ஜென்ம குருவாக சஞ்சரித்து அலைச்சலை அதிகரித்தாலும், வேலையில் இடமாற்றத்தை ஏற்படுத்தி குடும்பத்திற்கும் உங்களுக்கும் இடைவெளி உண்டாகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். திருமணம், குழந்தை, வீடு என்ற கனவு நனவாகும். அக்.20 முதல் தன, குடும்ப குருவாக சஞ்சரிப்பவர் பொருளாதார நிலையை உயர்த்துவார். பணப்புழக்கம் கூடும். கணவன் ஓரிடம் மனைவி ஓரிடம் என பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். திடீர் அதிர்ஷ்டம், வேலை, தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும்.  புதிய தொழில் தொடங்கும்  முயற்சியிலும் வெற்றி தருவார். 


சூரிய சஞ்சாரம் 

ஜன.1 – 14, ஏப்.14 – ஜூன் 14, செப். 18 – அக்.17, டிச. 16 – 31 காலங்களில் உங்கள் முயற்சி, சகாயம், சத்ரு ஜெயம், தொழில், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் செல்வாக்கு உயரும்.  எடுத்த வேலைகளை முடித்து வைப்பார். எதிரியை வெல்ல வைப்பார். வழக்கை வெற்றி கிடைக்கும்.  தொழிலை விரிவுபடுத்துவீர்கள். லாபம் உயரும். பிரச்னைகளை இல்லாமல் செய்வார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். 


பொதுப்பலன் 

பாக்கிய சனி, குரு சஞ்சாரம், பார்வைகள், 3,6,11 ல் சஞ்சரிக்கும் செவ்வாய், 3,6,10,11 ல் சஞ்சரிக்கும் சூரியன் என்று உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகி நினைத்த வேலைகள் நடந்தேறும். வருமானம் திருப்தி தரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நிம்மதி ஏற்படும். செல்வம், செல்வாக்கு உண்டாகும்.


தொழில் 

தொழிலில் ஏற்பட்ட தடை, பிரச்னை முடிவிற்கு வரும். நீண்டநாளாக மேற்கொண்ட முயற்சி இப்போது பலன் தரும். வருமானம் உயரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.  எதிர்பார்த்த ஒப்பந்தம்  கிடைக்கும். மினரல் வாட்டர், பால்பண்ணை, நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், காலண்டர், டைரி, நோட்டு புத்தகம் தயாரிப்பு, செய்தி தாள், ஐ.டி. துறை, வெளிநாட்டு வர்த்தகம், குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள், ஹார்ட்வேர், ஷேர் மார்க்கெட், சின்னத்திரை, வலைதளம், தனியார் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள் 

வேலையில் பிரச்னை, மெமோ, விரும்பாத இட மாற்றம், பதவி உயர்வில் தடை என பல சங்கடங்களுக்கு ஆளான நிலை மாறும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். பயத்துடன் வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் பயம் போகும். தனியார் நிறுவன பணியாளர்கள்  ஊதிய உயர்வுடன் புதிய பொறுப்பும் கிடைக்கும்.


பெண்கள் 

எல்லா இடத்திலும் செல்வாக்கு உயரும். புத்திசாலித்தனம் வெளிப்படும். நீண்டநாள் கனவு நனவாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம் என்ற அவரவர் எதிர்பார்ப்பு நிறைவேறும். கருத்து வேறுபாடு, வேலையின் காரணமாக கணவரை விட்டு விலகி இருந்தவர்கள் மீண்டும் சேர்வர். குடும்பத்தில் நிம்மதி நிலவும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். உடல் பாதிப்பு மறையும்.


கல்வி 

படிப்பில் அக்கறை கூடும். உயர் கல்வி கனவு நனவாகும் என்றாலும், ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது வளர்ச்சிக்கு துணைநிற்கும்.  எதிர்பார்த்த கல்லுாரியிலும், பாடப்பிரிவிலும் இடம் கிடைக்க வைக்கும்.


உடல்நிலை 

உடல் பாதிப்பு நீங்கி நலமுடன் வாழ்வீர்கள். நரம்புக்கோளாறு, மூச்சுத்திணறல், இதய பாதிப்பு, விபத்தால் செயல்பட முடியாத நிலையுடன் சங்கடப்பட்டு வந்தவர்கள் சீரான சிகிச்சையால் குணமடைவர்.


குடும்பம் 

மனக்குறை தீரும்.  கடன் தொல்லை மறையும். பொருளாதார நிலை உயரும். புதிய சொத்து, பொன் பொருள் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.  எதிர்பார்ப்பு நிறைவேறும்.  வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். சிலர் புதிய வீடு கட்டுவர்.  சுப நிகழ்ச்சி நடந்தேறும்.


பரிகாரம் : உலகளந்த பெருமாளை வழிபட முன்னேற்றம் உண்டாகும். பதவி கிடைக்கும்.

 
மேலும் 2026 வருட ராசி பலன் »
temple news
அசுவினி: வெற்றி மீது வெற்றிதைரிய காரகன் செவ்வாய், ஞான மோட்சக்காரகன் கேதுவின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
அசுவினி; யோக காலம்செவ்வாய், கேதுவின் அம்சம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் 2025 ஆங்கில வருடம் யோகமான வருடமாக ... மேலும்
 
temple news
அசுவினி; நல்லநேரம் ஆரம்பம்செவ்வாய், பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 ஆங்கில வருடத்தில் ... மேலும்
 
temple news
அசுவினி: தன்னலம் பாராமல் பிறருக்கு உதவும் அசுவினி நட்சத்திர அன்பர்களே இந்த ஆண்டு நீங்கள் ... மேலும்
 
temple news
கார்த்திகை: நல்லகாலம் வந்தாச்சுஆத்ம காரகன் சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar