அன்னூர்: 300 ஆண்டுகள் பழமையான, அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில், நேற்று உழவாரப்பணி நடந்தது. கோவில் வளாகம், மண்டபம், முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டது. பரிவார தெய்வங்கள், ஊஞ்சல் மற்றும் தரை பகுதி முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் உழவாரப் பணியில் பங்கேற்றனர். சொர்க்கவாசல் திறப்பு வருகிற 30ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, உழவாரப்பணி நடந்தது.