Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி பெருமாள் கோவில்களில் ... வைகுண்ட ஏகாதசி: ஊட்டி கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு வைகுண்ட ஏகாதசி: ஊட்டி கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலையில் கோத்தர் பழங்குடிகளின் பாரம்பரிய திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மலையில் கோத்தர் பழங்குடிகளின் பாரம்பரிய திருவிழா

பதிவு செய்த நாள்

30 டிச
2025
05:12

குன்னுார்: குன்னுார், கேத்தி அருகே, கொல்லிமலை கிராமத்தில், கோத்தர் இன மக்களின் மூர்கம்பட்டராயர் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில், கோத்தர் பழங்குடியின மக்கள் கொல்லிமலை, கோத்தகிரி, திருச்சிக்கடி உள்ளிட்ட, 7 கிராமங்களில் வசிக்கின்றனர். அதில், குன்னுார் அருகே உள்ள கொல்லிமலையில் கோத்தரின மக்களின் அய்யனோர், அம்மனோர் எனும் மூர்கம்பட்டராயர் திருவிழா நடந்தது. அதில்,

இங்கு ஆண்டிற்கு ஒரு முறை திறக்கப்படும், குனைனோர் கோவில்களில், விரதம் இருந்த கோத்தரின ஆண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

வெருகுரி சாஸ்திரம் எனப்படும், விழாவில், தினை, அவரை, உப்பு கொண்டு, ஆண்களால் சமைத்த பொங்கல் கோவிலில் வைத்து, வழிபாடு செய்து, வீடுகளில் உள்ளவர்களுக்கு வழங்கினர். 15 நாட்கள் விரதம் இருந்த மக்கள், ஆடல் பாடல்களுடன் நேற்று கொண்டாடினர். அதில், படுகரின மக்கள் உட்பட மற்ற சமூக மக்களையும், பாரம்பரிய இசைகளுடன் வரவேற்றனர். விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், தானியங்கள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். குலதெய்வத்தை வரவேற்கும் வகையில் பெண்கள் நடனமாடினர்.

அட்டாஸ்; குப்பாஸ் தொடர்ந்து, ஆண், பெண் இருவரும் சமம் என்பதை வலியுறுத்தும், அட்டாஸ் குப்பாஸ் எனப்படும் பாரம்பரிய நடனத்தில், வண்ண உடை மற்றும் அணிகலன்கள் அணிந்த ஆண்கள் நடனமாடினர்.

கோத்தர் பழங்குடியினரின் முதல் டாக்டர் வரதராஜ் கூறுகையில்,‘‘அமாவாசையில், 3ம் பிறை பார்த்து, டிச., அல்லது ஜன., மாதம் பண்டிகை கொண்டாடுகிறோம். கடந்த அமாவாசைக்கு பிறகு முதல் பிறை பார்த்து, கோவிலுக்கு சனியன்று ஆண்கள் மட்டுமே சென்றனர். திங்களன்று, ஆண்கள், பெண்கள் கோவிலுக்கு சென்றனர்,’’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar