உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்; மரகத நடராஜருக்கு புதிய சந்தன காப்பிட்டு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2026 11:01
ராமநாதபுரம்: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் மரகத நடராஜருக்கு இன்று (ஜன., 3) அதிகாலை 4:00 மணிக்கு புதிய சந்தன காப்பிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
ஆதி சிவன் கோவில் என்றழைக்கப்படும் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் டிச., 25ம் தேதியன்று காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 8:30 மணிக்கு மரகத நடராஜருக்கு சந்தனம் படி களைதல் நடந்தது. பின், மரகத நடராஜருக்கு பால், பன்னீர், சந்தனம், தைலக்காப்பு, தயிர் உள்ளிட்ட 32 வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, விடிய விடிய நடராஜருக்கு அபிஷேகம் நடந்தது. இன்று (ஜன., 3) அதிகாலை 4:00 மணிக்கு, மரகத நடராஜருக்கு புதிய சந்தன காப்பிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.