கைலாசநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பைரவர் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2026 11:01
தேவகோட்டை: தேவகோட்டை நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பட்டுக் குருக்கள் நகரில் ஸ்வர்ண பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. ஆகர்ஷண ஸ்வர்ண பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமமும் அதனைத் தொடர்ந்து அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மற்ற கோயில்களில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.