சாரதாம்பிகை கோயிலில் 40ம் ஆண்டு திருவிளக்கு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2026 09:01
காரமடை: காரமடை அருகே அம்பாள் ஸ்ரீ சாரதாம்பிகை கோயிலில், 40ம் ஆண்டு திருவிளக்கு வழிபாடு பூஜை நடைபெற்றது. காரமடை அருகே கன்னார்பாளையம் பகுதியில் அம்பாள் ஸ்ரீ சாரதாம்பிகை கோயில் உள்ளது. இக்கோயிலில் பொங்கலை முன்னிட்டு, 40ம் ஆண்டு திருவிளக்கு வழிபாடு பூஜை நடைபெற்றது. சிக்காரம்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். ஸ்ரீ அறக்கட்டளையை சேர்ந்த சரண்யா சாமுண்டீஸ்வரி மற்றும் டாக்டர். அதிதி ஆன்யா ஆகியோர் விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். ஏராளமான பெண்கள் விளக்கேற்றி சாரதாம்பிகை அம்பாளை வழிபட்டு வேண்டிக்கொண்டனர்.