சற்குரு நவபாஷான சித்தர் ஜீவபீடத்தில் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2026 12:01
வில்லியனுார்: வில்லியனுார் அருகே உள்ள சற்குரு நவபாஷான சித்தர் ஜீவபீடத்தில் குருபூஜை விழா நேற்று நடந்தது. வில்லியனுார், ஒதியம்பட்டுஅடுத்த தமிழக பகுதியானசந்திக்குப்பம் கிராமத்தில் சற்குரு நவபாஷான சித்தர் ஜீவ பீடம் உள்ளது.ஒதியம்பட்டு காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கு நேர் எதிரிலும் சங்கராபரணி நதிக்கரைக்கு வடக்கே அமைந்துள்ள, ஜீவ பீடத்தில் தியான நிலையில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சற்குரு நவபாஷான சித்தருக்கு நேற்று மகா குரு பூஜை விழா நடந்தது.
விழாவையொட்டி, நவபாஷான சித்தர் பீடத்திற்கு நவக்கிரக பூ மாலைகள் அணிவித்து காலை 6:45 மணி முதல் 7:45 மணி வரை கோ பூஜை, மகா கணபதி ஹோமம் நடந்தது.காலை 9:00 மணியளவில் சித்தர் ஜீவ பீடத்தில் மூலிகை அபிேஷகம் மற்றும் 108 சங்கு அபிஷேகம் நடந்தது.
11:30 மணியளவில் மகா தீபாராதனை, குரு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. குரு பூஜைக்கான ஏற்பாடுகளை சந்திகுப்பம் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.