Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சற்குரு நவபாஷான சித்தர் ... கருட வாகனத்தில் வீரராகவர் வீதியுலா கருட வாகனத்தில் வீரராகவர் வீதியுலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் மலைச்சுற்று விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில்களில் மலைச்சுற்று விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

18 ஜன
2026
12:01

திருத்தணி: திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை மலைப்பகுதியில் உள்ள சிவசக்தி சித்தேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று, மலைச்சுற்று விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று, மலைச்சுற்று விழாவையொட்டி மூலவர் ஈஸ்வரனுக்கு, காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 – நள்ளிரவு 2:00 மணி வரை கோவிலில், பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த பஜனை குழுவினர், பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர்.


இதில், 12,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து, இரவு 7:00 – அதிகாலை 3:00 மணி வரை கோவில் வளாகத்தை, 108 முறை சுற்றி வந்து மூலவரை தரிசித்தனர். அதேபோல், திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான சப்த கன்னியம்மன் கோவிலில், காணும் பொங்கலை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து, அம்மனை வழிபட்டனர்.


அதேபோல், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கைலாசா பிரம்மா கோவில், அகூர் அகத்தீஸ்வரர் கோவில், லட்சுமாபுரத்தில் உள்ள சிவன், பெருமாள் கோவில், நாபளூர் அகத்தீஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சுவாமி வீதியுலா நடந்தது. பள்ளிப்பட்டு பொதட்டூர்பேட்டை ஆறுமுக சுவாமி மலைக்கோவிலில், 86ம் ஆண்டாக நடைபெற்ற மலைச்சுற்று திருவிழாவில், 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


மாலை 6:00 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் மற்றும் ஆறுமுக சுவாமி கோவிலில் இருந்து அகத்தீஸ்வரர், விநாயகர், முருகன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் பரிவேட்டை நடத்தினர். அதேபோல், அத்திமாஞ்சேரிபேட்டை, கொத்தகுப்பம், பள்ளிப்பட்டு, வங்கனுார் மலைக்கோவில்களிலும், நேற்று கிரிவலம் கோலாகலமாக நடந்தது. பள்ளிப்பட்டு பார்வதி சமேத சங்கமேஸ்வரரும் நேற்று, நகரி சாலையில் உள்ள மலைக்கோவிலுக்கு எழுந்தருளினார். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar