பனிமயமாதா ஆலயத்தில் தங்கத்தேர் அமைக்கும் பணி துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2013 10:01
தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா தேரோட்டத்திற்காக, தங்கத்தேரை அலங்கரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம், 1713ல் கட்டப்பட்டது. இதன் 300வது ஆண்டு நிறைவையொட்டி, ஆக.,5ம்தேதி, இங்கு, தங்கத்தேரோட்டம் நடக்கிறது. அதற்காக, நேற்று, குருசு ஆலயத்தில் இருந்து தங்கத்தேர், பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமையில், பனிமய மாதா ஆலயத்திற்கு இழுத்துவரப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, தேரை அலங்கரிக்கும் பணி துவங்கியது. இதற்கு முன்னதாக, 14 முறை தங்கத்தேர் இழுக்கப்பட்டுள்ளது.