குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு 2 மாதத்தில் ரூ.15 கோடி வருவாய்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2026 11:01
தட்சிணகன்னடா: பிரசித்தி பெற்ற குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு, இரண்டே மாதங்களில் 15 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கர்நாடகாவின் பணக்கார கோவில் என்ற பெயரை தக்க வைத்துள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், சுள்ளியா தாலுகாவில் அமைந்துள்ள குக்கே சுப்ரமண்யா கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். தென்னகத்தின் பிரபலமான தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இது கர்நாடகாவின் பணக்கார கோவில்களின் பட்டியலில், முதலிடத்தில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர். தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர். கோவிலுக்கு கோடிக்கணக்கான ரூ பாய் வருகிறது. கடந்த 2025 நவம்பர், டிசம்பரில் 15 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இது குறித்து, கோவில் செயல் நிர்வாக அதிகாரி அரவிந்த் அயப்பா சுதகுன்டி கூறியதாவது: கடந்த 2025 நவம்பரில், பல்வேறு சேவைகள் மூலமாக 4.46 கோடி ரூபாய், உண்டியல் வழியாக 1.99 கோடி ரூபாய், அன்னதான நிதியாக 83.57 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதே போன்று டிசம்பரில், பல்வேறு சேவைகள் மூலமாக 5.30 கோடி ரூபாய், உண்டியல் வழியாக 1.90 கோடி ரூபாய், அன்னதான நிதி மூலமாக 1.07 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதை தவிர தங்கும் விடுதிகள், பிரசாத விற்பனை உட்பட, பல விதங்களிலும் கோவிலுக்கு பெருமளவில் வருவாய் வந்தது. நவம்பர், டிசம்பரில் 15 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த நிதி கோவில் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.