வால்பாறை: வால்பாறை அருகே, மாரியம்மன் கோவில் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலின், 42ம் ஆண்டு திருவிழா கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி பூஜையும், 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. மாலை, 5:30 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து, பக்தர்கள் புனித நீராடி சக்தி கும்பம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இன்று, காலை, 8:30 மணிக்கு வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து, மகளிர் அணியினர் திருமண சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக செல்கின்றனர். தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெள்ளசாமி, செயலாளர் அர்சுனன், பொருளாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.