முசரவாக்கம்: முசரவாக்கம் அடைஞ்சியம்மன், கோட்டை மாரியம்மன் கோவிலில் மயிலார் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் கிராமத்தில் அடைஞ்சியம்மன், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் மயிலார் திருவிழா நடைபெறும். அதன்படி, நடப்பாண்டிற்கான திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் , நேற்று மாலை 4:00 மணிக்கு அடைஞ்சியம்மன் குதிரை வாகனத்திலும், கோட்டை மாரியம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி, வீதியுலா வந்தனர். விழா வில், பக்தர்கள் தேர் இழுத்தல், வேல் குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. இன்று காலை 9:30 மணிக்கு துரியோதன் படுகளம் நிகழ்ச்சி நடக்கிறது.