மதுரமங்கலம்: வைகுண்ட பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் எம்பார் சுவாமிகளின் 1000வது ஆண்டு விழா நேற்று விமரிசையாக நடந்தது. மதுரமங்கலம் கிராமத்தில், கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் மற்றும் எம்பார் சுவாமிகள் கோவில் உள்ளது. இங்கு, ஜன., 19ம் தேதி காலை, கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை, 5:20 மணி அளவில் கலசப் புறப்பாடு நடந்தது. காலை, 5:40 மணிக்கு கோபுர கலசத்தின் மீது, வேதியர்கள் புனித கலச நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். இதையடுத்து, எம்பார் சுவாமிகளின் 1000வது ஆண்டு ஸஹஸ்ராப்தி வைபவ மஹோத்சவம் துவங்கியது.