திருத்தணி நகராட்சிக்குட்பட்ட டி.புதுார் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி, வீரகொள்ளாபுரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பொது கும்ப விழா நடந்து வருகிறது. அந்த வகையில், பொது கும்ப விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில் வளாகத்தில், 30 யாகசாலைகள் அமைக்கப்பட்டன. காலை, 9:00 மணிக்கு உற்சவர்கள் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் பரமேஸ்வர சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்துக் கொண்டு திருமாங்கல்யம் மற்றும் சுமங்கலி பூஜை நடத்தி வழிப்பட்டனர். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது. இன்று மாலை மகா கும்ப பூஜையும், நாளை வேள்வி பூஜையும், யாகசாலை பூஜையும் நடைபெறும். காலை, 10:30 மணி முதல், மதியம், 12:00 மணி வரை கும்ப கலச பூஜை மற்றும் மூலவருக்கு கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.