உப்பட்டி இடும்பன் கோவில் திருவிழா: கறி விருந்து படையல்.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2026 11:02
பந்தலூர்; பந்தலூர் அருகே உப்பட்டி ஸ்ரீ இடும்பன் கோவில் திருவிழாவில், பகவானுக்கு கறி விருந்து படைக்கப்பட்டது.
பந்தலூர் அருகே உப்பட்டி பஜார் பகுதியில் ஸ்ரீ செந்தூர் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இதன் தைப்பூச திருவிழா கடந்த வாரம் நிறைவு பெற்ற நிலையில், இடும்பன் கோவில் திருவிழா மற்றும் பூஜை நேற்று நடந்தது. கடந்த 7-ம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கிய, விழாவில் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஆடு மற்றும் கோழி பலியிடப்பட்டு நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகளும், மதியம் இடும்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டதுடன், கறி விருந்து படையல் போட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் வேலுசாமி, முருகன் கோவில் அர்ச்சகர்கள் சுந்தர்ராஜா மற்றும் கருப்பையா செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா மூர்த்தி, தலைவர் செந்தில்வேல், செயலாளர் முருகேசன், பொருளாளர் பொன் மோகன்தாஸ் தலைமையிலான கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.