வெங்கத்துார் துலுக்காணத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2026 12:02
வெங்கத்துார்: வெங்கத்துார் துலுக்காணத்தம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி வெங்கத்துார் கண்டிகை பகுதியில் துலுக்காணத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி – தெய்வானை, நவகிரக மூர்த்திகள், பரசுராமர், நாக தேவதை, கங்கையம்மன், செல்லியம்மன் உள்ளிட்ட சுவாமியருக்கு, நேற்று காலை 7:30 – 8:50 மணிக்குள், கும்ப லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, கடந்த 5-ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, நேற்றிரவு சிறப்பு மலர் அலங்காரத்தில் துலுக்காணத்தம்மன் வீதியுலா வந்தார்.