* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும். * உலகம் கடவுளுக்கு சொந்தமானது. அவரது கையில் நாம் வெறும் பொம்மைகளே. * பகலும் இரவும் சேரும் நேரம் வழிபாட்டிற்கு ஏற்ற நேரம். * எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல் ஜபம் செய். * துாய மனம் கொண்டவர்கள் அனைத்தையும் துாய்மையாகவே காண்பர். * முன்பு செய்த வினைப்படியே துன்பம் வருகிறது. அதை தாங்கிக் கொள். * நல்ல செயல்களை செய்வதன் மூலம் தீவினை கழியும். * கருணை, இரக்கம் இல்லாதவனை மனிதன் என சொல்ல முடியாது. * மனிதப்பிறவியில் சுகம் என்பது இல்லவே இல்லை. * ஒருவருடைய கர்மபலன் முடிவடைந்ததும் கடவுளின் காட்சி கிடைக்கும். * கடவுள் மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் பொய். * உன் விருப்பத்தை கடவுளிடம் சொல். நல்லது எது, கெட்டது எது என்பதை அவர் பார்த்துக் கொள்வார். * சாதிக்க முடியாததையும் பக்தி மூலம் சாதிக்கலாம். * தீய எண்ணம் இருக்கும் வரை மனதில் அமைதி இருக்காது. * தகுதி இல்லாமல் ஆசைப்படாதே. அது உன் மனதை அலைக்கழிக்கும்.