* நல்லதைச் செய். உனக்கு நல்லதே நடக்கும். * அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே. வாழ்நாள் முழுவதும் படி. * சிறிய செயல் செய்பவரை பார்த்து நீ சிரித்தால் கடவுள் உன்னை பார்த்து சிரிப்பார். * வாழ்வின் உயிர்நாடியான நீதியை காப்பது உன் கடமை. * தவறான செயலை செய்து விட்டு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே இதற்கு தீர்வு. * கடவுளை வழிபட்டால் உயர்ந்த நிலையை அடைவாய். * உன் தகுதியை வளர்த்துக் கொள். அதில் சமரசம் செய்யாதே. * உயிர் வாழ உணவு அவசியம். அது போல சுதந்திரமாக வாழ தியாகம் அவசியம். * அனைவரிடமும் அன்பு காட்டுவதே தர்மத்தில் சிறந்தது. * மனம் பலவீனமாக இருந்தால் தீய சிந்தனை தோன்றும். * பிறருக்கு உதவி செய்தால் அளப்பரிய சக்தி பெறுவாய். * மனம் கடவுளின் இருப்பிடம். அதை துாய்மையாக வைத்திரு. * எதற்கெடுத்தாலும் சந்தேகப்படாதே. அதனால் மனவலிமை குறையும். * கல்வி கற்றால் அறிவு வளர்வதோடு நற்பண்புடன் வாழலாம். * கோபப்படாதே... அது உன் முகத்தின் அழகை கெடுக்கும். * தீய எண்ணம் தோன்றும் போதே அதை கிள்ளி எறிந்திடு.