சூலூர் மேற்கு மாகாளியம்மன் கோயிலில் பூச்சாட்டு திருவிழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2026 02:02
சூலூர்; சூலூர் மேற்கு மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மேற்கு மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, கடந்த, ஜன. , 27 ம்தேதி இரவு சாமி சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. கடந்த, 3 ம்தேதி அக்னி கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். நேற்று முன்தினம் மதியம் பக்தர்கள் சீர்தட்டு எடுத்து வந்து அம்மன் திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர். நேற்று காலை, நொய்யல் ஆற்றில் இருந்து மேள, தாளத்துடன் சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் அழைத்து வரும் நிகழ்வு நடந்தது. சக்தி கரகம் மற்றும் பால்குடம் எடுத்து பக்தர்கள் உடன் வந்தனர். முக்கிய வீதிகள் அம்மன் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு, அபிஷேக, அலங்கார பூஜை திருவிழா நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.