புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் குமரேஸ்வரர் கோவிலில் உள்ள மயில் வாகனத்திற்கு நுாற்றாண்டு விழா நடந்தது.
கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத குமரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள மயில் வாகனம் நுாறு வருடங்கள் நிறைவையொட்டி, மயில் வாகனத்திற்கு விக்னேஸ்வரர் பூஜை, சத்ரு சம்ஹார ஹோமம், கலச அபிஷேகம், மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து குமரேஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு மயில் வாகனத்தில் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை இந்து சமய துறை ஆணையர் குமரன், கோவில் நிர்வாக அதிகாரி ஜெயக்குமார், அர்ச்சகர் பாஸ்கர் குருக்கள் மற்றும் கரிக்கலாம்பாக்கம் மக்கள் செய்திருந்தனர்.