Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவிலில் சிவராத்திரி வழிபாடு; ... ஸ்ரீசத்ய சாய் மண்டலில் சிவராத்திரி  விழா ஸ்ரீசத்ய சாய் மண்டலில் சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒச்சாண்டம்மன் கோயிலுக்கு புறப்பட்டது ‘மாசிப்பெட்டி’ மகாசிவராத்திரி வழிபாடுக்கு திரண்ட பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஒச்சாண்டம்மன் கோயிலுக்கு புறப்பட்டது ‘மாசிப்பெட்டி’ மகாசிவராத்திரி வழிபாடுக்கு திரண்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

16 பிப்
2026
12:02

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மாசிப்பச்சை, மாசிக்களரி மகா சிவராத்திரி திருவிழா வழிபாட்டுக்கு 5 மாசிப்பெட்டிகளை பூஜாரிகள், கோடாங்கிகள், பக்தர்கள் புடைசூழ எடுத்துச் சென்றனர்.


உசிலம்பட்டி பகுதியில் மாசிப்பச்சை மகாசிவராத்திரி திருவிழாவை, குலதெய்வ வழிபாடாக கொண்டாடுகின்றனர். கருமாத்துார் மூணுசாமி கோயில்கள், வாலாந்துார் அங்காளஈஸ்வரி, திடியன் சோணை முத்தையா, ஆரியபட்டி கல்யாணகருப்பசாமி, நாட்டாமங்கலம், கொக்குளம் ஆதிசிவன் உள்ளிட்ட கோயில் களுக்கு குலதெய்வ வழிபாட்டுக்காக மக்கள் திரண்டு வருகின்றனர்.


இதில் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் வழிபாட்டுக்கும் ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர். இதற்காக நேற்று காலை 10:30 மணியளவில், உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் இருந்து பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மகாசிவராத்திரி வழிபாட்டுக்காக அம்மனின் ஆபரணங்கள் அடங்கிய மாசி பெட்டிகளை 5 பூஜாரிகள், எட்டும் இரண்டும் பத்து தேவர் குடும்பத்தினர், அக்கா மக்கள் குடும்பத்தினர், கோடாங்கிகள் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அன்னம்பாரிபட்டி, வடகாட்டுப்பட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, இளந்தோப்பு வழியாக ஒச்சாண்டம்மன் கோயிலுக்கு எடுத்துச் சென்று ஆதி வழக்கப்படி பக்தர்கள் ‘மாசி பச்சை’ கொண்டு வந்து இரவு முழுவதும் வழிபாடு நடந்தது. இன்று பிப். 17, மாலை மீண்டும் பெட்டிகள் உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலுக்கு கொண்டு வரும்போது, வத்தலக்குண்டு ரோட்டில் இருந்து அய்யன், மாயாண்டி சுவாமிகள் ஆணிச்செருப்பில் நடந்து கோயிலுக்கு வருவர். இதனை பார்க்க ஏராளமான பக்தர்கள் திரள்வர். உசிலம்பட்டி டி.எஸ்.பி., சந்திரசேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar