Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மன் கோயில் பொங்கல் விழாவிற்காக ... புதுப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா புதுப்பாளையம் அங்காள பரமேஸ்வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 ஸ்ரீலலிதாம்பிகை கோயிலில் வரும் 22ல் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 ஸ்ரீலலிதாம்பிகை கோயிலில் வரும் 22ல் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 பிப்
2026
05:02

கோவை: பெரிய தடாகத்தில் அனுவாவி சுப்ரமணியர் கோயில் அடிவாரத்தில் ஸ்ரீலலிதாம்பிகை அம்மன் கோயில் உள்ளது. இதன் கும்பாபிஷேகம் 22ம் தேதி காலை 8 – 9.30 மணிக்குள் நடக்கிறது.


ரிஷிகேஷ் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தின் தலைவர் சாஷாத்கிருதானந்த சரஸ்வதி, ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலம் தலைமை ஆச்சார்யா சதத்மானந்தா சரஸ்வதி, ஆச்சார்யா சங்கரானந்தா சரஸ்வதி, பேரூர் ஆதினம் மருதாசல அடிகள், கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடக்கிறது. கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி இன்று (19ம் தேதி) காலை 9 மணிக்கு துவங்குகிறது. முதல் கால யாக வேள்வி நாளை (20ம் தேதி), இரண்டாம், மூன்றாம் கால யாக வேள்வி நாளை மறுதினம் (21ம் தேதி), நான்காம் கால வேள்வி 22ம் தேதியும் நடைபெறும். தொடர்ந்து, வடபத்ர காளியம்மன், லலிதாம்பிகை அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயில் நிறுவனர் ஜெகதாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கும்பாபிஷேக விழாவுக்கு 5,000க்கு மேற்பட்ட பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கிறோம். வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டிருக்கிறது. தற்காலிக கழிப்பறைகள் அமைக்கிறோம்,’’ என்றார்.  மேலும் அவர் கூறுகையில், ‘‘ஸ்ரீலலிதாம்பிகா அறக்கட்டளையின் கீழ் கிராமப்புற மக்கள், மலைவாழ் மக்கள், முதியோர்களுக்கு மருத்துவ உதவி, அன்னதானம் அளிக்கப்படுகிறது. புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை, மருந்து இலவசமாக கிடைக்கச் செய்கிறோம். மருத்துவ முகாம் நடத்துகிறோம். லலிதாம்பிகா பீடத்தில் தியான பயிற்சி அளிக்கிறோம். லலிதா சகஸ்ரநாமத்தை தமிழில் மொழி பெயர்த்து, 10,000 பேருக்கு உபதேசம் செய்திருக்கிறோம்,’’ என்றார். அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர்கள் கணேஷ், சாய் முரளி, விஜய் ஆனந்த் உடனிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar