Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இளையனார்வேலுார் முருகன் கோவிலில் ...  ஸ்ரீலலிதாம்பிகை கோயிலில் வரும் 22ல் கும்பாபிஷேகம்  ஸ்ரீலலிதாம்பிகை கோயிலில் வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோயில் பொங்கல் விழாவிற்காக தீச்சட்டி, ஆயிரங்கண் பானை தயாரிக்கும் பணி தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அம்மன் கோயில் பொங்கல் விழாவிற்காக தீச்சட்டி, ஆயிரங்கண் பானை தயாரிக்கும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

18 பிப்
2026
05:02

மானாமதுரை; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் நடைபெறும் பொங்கல் விழாவில்  தீச்சட்டி எடுத்தல் விழாவிற்காக மானாமதுரையில்  தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சீசனிற்கு தகுந்தாற் போல் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பாண்ட பொருட்களை தயாரித்து வருகின்றனர். 


இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் தமிழகம் மட்டும் இல்லாத வெளி மாநிலங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் மாசி,பங்குனி,சித்திரை மாதங்களில் பெரும்பாலான அம்மன் கோவில்களில் பொங்கல் பூஜை விழா நடைபெறும் போது ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி மற்றும் ஆயிரங்கண் பானை எடுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி அம்மனை வழிபட்டு செல்வர்.பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன், காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன், விருதுநகர், இருக்கன்குடி, அருப்புக்கோட்டை,  திருச்சுழி, நத்தம்,திண்டுக்கல் ஆகிய  ஊர்களில் உள்ள அம்மன் கோவில்களில் தீச்சட்டி திருவிழா  மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக நடைபெறுவது வழக்கம்.இந்த விழாக்களுக்காக தற்போது மானாமதுரையில் மண்ணால் ஆன தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது. மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில்,மேற்கண்ட ஊர்களில் நடைபெறும் விழாவிற்காக வியாபாரிகள் தீச்சட்டிகளுக்கு இங்கு வந்து ஆர்டர் கொடுத்துள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் டீச்சர் மிகவும் தரமாகவும் அழகாகவும் இருப்பதோடு மட்டுமில்லாமல் அம்மன் உருவமும் பொறிக்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசியிருப்பதினால் இங்கு வந்து பெருமளவில் ஆர்டர்கள் கொடுப்பதாக என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar