Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ... அன்னையின் 148 வது பிறந்தநாள்; அன்னை அரவிந்தர் அறையில் பக்தர்கள் தரிசனம் அன்னையின் 148 வது பிறந்தநாள்; அன்னை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்த்தசாரதி கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் வரும் 24ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
பார்த்தசாரதி கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் வரும் 24ம் தேதி துவக்கம்

பதிவு செய்த நாள்

21 பிப்
2026
03:02

பாலக்காடு; பாலக்காடு அருகே, கோட்டாயி பார்த்தசாரதி கோவிலில் செம்பை ஏகாதசி சங்கீத உற்சவம், வரும் 24ம் தேதி துவங்குகிறது.


கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் ஏகாதசி உற்சவம் நடப்பது வழக்கம். செம்பை குடும்பத்தினர் நடத்தும் இந்த உற்சவம் பிரசித்தி பெற்றது. நாளை, 23ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. தந்திரி அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு தலைமை வகிக்கிறார். வரும், 24ம் தேதி மாலை, 6:00 மணிக்கு பிரபல இசைக்கலைஞர் டி.வி. கோபாலகிருஷ்ணன் சங்கீத உற்சவத்தை துவக்கி வைக்கிறார். தொடந்து அவரது கச்சேரி நடக்கிறது. வரும், 25ம் தேதி மாலை, 6:00 மணிக்கு மாதங்கி மற்றும் சுகுமாரி நரேந்திரமேனன் ஆகியோரின் சங்கீதக் கச்சேரி நடக்கிறது. 26ம் தேதி மாலை 6:00 மணிக்கு நெடும்பள்ளி ராம்மோகன் மற்றும் மீரா ராம்மோகன் ஆகியோரின் சங்கீதக் கச்சேரி நடக்கிறது. 27ம் தேதி காலை, 8:30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை, 10:00 மணிக்கு மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை, 11:00 மணிக்கு இளம் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடக்கிறது. அன்று, மாலை, 6:00 மணிக்கு ராமநாதனின் சாக்ஸபோன், பாதிரியார் பாள் பூவத்திங்கள், பிரகாஷ் உள்ளியேரி குழுவின் ஹார்மோனியம், இரவு, 8:30 மணிக்கு விஜய் ஜேசுதாஸ், 9:30க்கு அனுப், பார்வதி திலீப் ஆகியோரின் வயலின் கச்சேரிகள் நடக்கிறது. வரும், 28ல் ஏகாதசி உற்சவம் நிறைவடைகிறது. உற்சவத்தின் நிர்வாகி செம்மை சுரேஷ், ஒருங் கிணைப்பாளர் கீழத்தூர் முருகன், கோவில் நிர்வாகத்தினர், இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar