சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி யாக பூஜையில் ஏராளமானோர் பங்கேற்று, தரிசனம் பெற்றுச் சென்றனர்.
உலக நன்மை வேண்டி நடந்த பூஜையில் முன்னதாக வாராகி அம்மனுக்கு திரவிய அபிஷேகங்களும், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காயில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். வளர்பிறை பஞ்சமி யாக பூஜையை வாராகி அறக்கட்டளை தலைவர் சஞ்சீவி சுவாமிகள் நடத்தி வைத்தார்.
திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களுக்கு பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.