Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரையில் வைரத்தேர் ... மாகறலீஸ்வரர் கோவிலில் மாசிமக விழா கொடியேற்றம் மாகறலீஸ்வரர் கோவிலில் மாசிமக விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி திருவிழாவிற்கு அக்னி சட்டி, பொம்மை தயார்
எழுத்தின் அளவு:
பங்குனி திருவிழாவிற்கு அக்னி சட்டி, பொம்மை தயார்

பதிவு செய்த நாள்

23 பிப்
2026
01:02

திருப்புவனம்: தென்மாவட்டங்களில் மாரியம்மன் கோயில்களில் பங்குனி விழா தொடங்கிய நிலையில் திருப்புவனத்தில் கண்கவர் அக்னிசட்டி, பொம்மை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.


மாசி, பங்குனி மாதங்களில் தென்மாவட்டங்களில் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும், திருப்புவனம், தாயமங்கலம், இருக்கன்குடி உள்ளிட்ட ஊர்களில் உள்ள அம்மன் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு பக்தர்கள் விரதமிருந்து அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, பொம்மை, பாதம், நாகம் உள்ளிட்டவைகளை சுமந்து வந்து செலுத்துவது வழக்கம்.


இதற்காக திருப்புவனம் வேளார் தெருவில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அக்னிசட்டி மற்றும் பொம்மைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தொழிலாளர்கள் கூறுகையில், சுற்றுப்புற சூழலை பாதிக்காத பச்சை மண் சட்டிகள் இவை, தண்ணீரில் போட்டாலும் எளிதில் கரைந்து விடும், மண்ணை எந்த விதத்திலும் பாதிக்காது நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 சட்டிகள் வரை தயாரிக்கிறோம், பின் அதற்கு வர்ணம் பூசி அம்மன் படங்களை வரைந்து வெயிலில் காயவைத்து விற்பனை செய்கிறோம், அக்னிசட்டிகள், பாதம், பொம்மைகள் அதன் அளவுகளை பொறுத்து 200 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கிறோம் என்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar