பெருமாநல்லுார்: பெருமாநல்லுாரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் எதிரே வீர ஆஞ்சநேயர் என்ற ஸ்ரீ அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது.
கடந்த 15ம் நுாற் றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இக்கோவிலில் கருவறை, விமான கோபுரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், துவஜஸ்தம்பம், ஆகியவை கட்டப்பட்டு கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மகா மண்டப துாண்களில் உலக பிரசித்தி பெற்ற 20 பழம்பெரும் ஆஞ்சநேயர் புடைப்பு சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கோவில் திருப்பணிகள் நிறைவுபெற்று, கும்பாபிஷேகம் நேற்று காலை 7:30க்கு மேல் 8:30 மணிக்குள் சோசலே வ்யாஸராஜ மடம் ஸ்ரீ ஸ்ரீ 1008 வித்யா விஜய தீர்த்த சுவாமிகள் தலைமையில் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை, தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கும்பாபிஷேக நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.