Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028 விருச்சிகம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028 விருச்சிகம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - ...
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (6.3.2026 முதல் 24.4.2028 வரை)
துலாம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028
எழுத்தின் அளவு:
துலாம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028

பதிவு செய்த நாள்

04 மார்
2026
11:03

சித்திரை: சவாலே சமாளி


தைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய்க்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடங்களுக்குரிய பலன்களை வழங்கிடக் கூடியவராகிறார். சித்திரை 1,2ம் பாதத்தினருக்கு சனி சப்தம ஸ்தானத்தில் கண்டக சனியாகவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய சனியாகவும் சஞ்சரிக்க உள்ளார். இதனால் 1,2ம் பாதத்தினருக்கு, குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நெருக்கடிகளையும், வாழ்க்கைத்துணையுடன் இணக்கமற்ற நிலையினையும், கூடா நட்புகளால் கேடுகளையும் உண்டாக்குவார். உடல்நிலையில் பாதிப்பையும் மனதில் குழப்பத்தையும் அதிகரிப்பார். 3,4ம் பாதத்தினருக்கு எடுத்த காரியம் யாவிலும் வெற்றியினை வழங்குவார் என்றாலும், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்தநிலை. திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் மாற்றம் ஏற்படும். 

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கண்டக சனியாலும், அவருடைய பார்வைகளாலும் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மனதில் நிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். 3,4ம் பாதத்தினருக்கு விரய செலவுகள் குறையும். உடல்நிலை சீராகும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். சகோதரர்கள் ஆதரவு கிடைக்கும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். தொண்டர் பலம் கூடும். புதிய பொறுப்பும் பதவியும் கிடைக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்
சித்திரை 1,2ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 வரை ஆறாமிட ராகுவால் செல்வாக்கு உயரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். நவ. 13, 2026 முதல் லாப கேதுவால் பொருளாதார நிலை உயரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, நவ. 13, 2026 வரை லாப கேதுவால் வரவேண்டிய பணம் வரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய பொருட்கள் சேரும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக 1,2ம் பாதத்தினருக்கு
கடகம் மற்றும் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் விருப்பங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உயர்கல்வி கனவு நனவாகும். குழந்தை பாக்யம் உண்டாகும். கடகம் மற்றும் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் கண்டக சனியின் பாதிப்பு விலகும். 3,4ம் பாதத்தினருக்கு மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். திருமணம், குழந்தை, சொந்தவீடு என்ற கனவு நனவாகும். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் சனி பகவானின் பாதிப்பு விலகும். வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். வரவேண்டிய பணம் வரும்.

பொதுப்பலன் போராட்டம் நெருக்கடி என்றிருந்த நிலைகளில் மாற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். சொந்த வீடு, வாகனம் என்று சேரும். தொழில் லாபம்தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீண் செலவுகள் கட்டுப்படும். உடல்நிலை சீராகும். உயர் கல்வி, திருமணம், வேலை என்ற கனவுகள் நனவாகும். பணம், புகழ், அந்தஸ்து, செல்வாக்கு என்று அனைத்தும் கிடைக்கும்.

தொழில் 
தைரியமாக செயல்படக்கூடிய உங்களுக்கு தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். போட்டியாளரால் ஏற்பட்ட இடையூறுகள் இருந்த இடம் தெரியாமல் போகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மெடிக்கல், உணவகம், விவசாயம், ரசாயன பொருட்கள், குடிநீர், பப்ளிகேஷன், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஜவுளி, காலண்டர், நோட்டுப்புத்தகம் தயாரிப்பு, பள்ளிகள், யூட்யூப், சின்னத்திரை, சினிமா தொழில்கள் முன்னேற்றம் அடையும். காவல்துறை, பாதுகாப்புப்படை, மருத்துவத்துறையினர் லாபம் அடைவர்.

பணியாளர்கள் 
எதிர்பார்த்த இடமாற்றமும் நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் கிடைக்கும். தினப்பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.

பெண்கள்
தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படக்கூடிய உங்களுக்கு, உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். பொன் பொருள் சேரும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். கணவர், பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.

கல்வி 
குருப் பார்வைகள் சாதகமாக இருப்பதால்
படிப்பில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை 
மருந்து மாத்திரை மருத்துவமனை என்ற நிலை மாறும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் சிகிச்சையால் குணமாகும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியத்துடன் நடைபோடக்கூடிய நிலை உண்டாகும்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம், ஆடை ஆபரணம் என்று சேரும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடு விலகும்.
பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.

பரிகாரம் :மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட நன்மை உண்டாகும்.


சுவாதி:நல்லகாலம் வந்தாச்சு


யோகக்காரகன் ராகு, அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஐந்தாமிடத்தில் சஞ்சரித்து, குடும்பத்தில் நெருக்கடி, மனதில் குழப்பம், வாழ்க்கைத் துணையுடனும் நண்பர்களுடனும் ஒட்டுதல் இல்லா நிலை, தொழிலில் பிரச்சனை,  வருமானத்தில் தடை, எந்த ஒன்றிலும் முன்னேற்றம் இல்லை என்று உங்களைப் படாதபாடு படுத்தி வந்த சனி பகவான், மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு சத்ரு ஜெய ஸ்தானமான ஆறாமிடத்தில் நட்பாக சஞ்சரிக்க உள்ளார். இதுவரை உங்களுக்கு எதிர்மறையான பலன்களையே வழங்கி வந்தாலும், கோச்சார ரீதியாக ஆறாம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் நிலை உயரும். ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் வெற்றியாகும். எதிர்ப்பு, பகை என்பதெல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் விலகும். உடல்நிலையும் மனநிலையும் சீராகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் எல்லாம் விலகும். பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சியடையும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால், உங்கள் ராசிக்கு 8,12 ம் இடங்களுக்கு சனி பகவானின் பார்வைகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். மறைமுகத் தொல்லைகள் விலகும். உடல்நிலை சீராகும். விரயச்செலவுகள் கட்டுப்படும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 

ராகு - கேது சஞ்சாரம் நவ.13, 2026 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பண வரவு இருக்கும். செய்துவரும் தொழில் லாபமடையும். புதிய சொத்து சேரும். அன்பானவர்கள் ஆதரவு கிடைக்கும். நவ. 13, 2026 முதல் ராகு, சுக ஸ்தானத்திலும், கேது ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் கூடுதல் அக்கறை தேவைப்படும். வெளிநாடு செல்வதற்கான முயற்சி வெற்றியாகும். தாயாரின் உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்புகள் ஏற்படும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக  மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம் என்ற தேவைகள் பூர்த்தியாகும்.
செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில்  வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். ஆடம்பர செலவு அதிகரிக்கும்.

பொதுப்பலன் 
இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் போராட்டங்கள் எல்லாம் முடிவிற்குவரும். கடந்தகால அனுபவங்களைக் கொண்டு முன்னேற்றத்தை எட்டுவீர்கள். அவமானத்திற்கு அஞ்சி யோசித்து யோசித்து செயல்பட்டு வந்த உங்களுக்கு, ஆறாமிட சனியின் காலம் அதிர்ஷ்டக் காலமாகும். இதுவரை எதிர்பார்த்தும் முயற்சி செய்தும் கிடைக்காத ஒவ்வொன்றும் இப்போது கிடைக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். உங்களை விமர்சித்தவர்களும், அலட்சியமாக பார்த்தவர்களும் பாராட்டிடக்கூடிய நிலை உருவாகும். பணம், புகழ், அந்தஸ்து, செல்வாக்கு என்று அனைத்தும் கிடைக்கும்.

தொழில் 
யோகக் காரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். தொழிலில் ஏற்பட்ட தடைகள், பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் யாவும் விலகும். மீண்டும் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். ஐந்தாண்டுகளுக்குப் பின் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் இப்போது கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வியாபாரம், ரசாயனம்,  தொழிற்சாலைகள், ஓட்டல், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல் ஏஜென்சி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, பில்டிங் டிசைனிங், டெக்ரேஷன், ஆடை உற்பத்தி மற்றும் விற்பனை, ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஆதாயம் கிடைக்கும். சினிமா, தொலைக்காட்சி வலைதளம் முன்னேற்றமடையும்.

பணியாளர்கள்  
அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும் சலுகைகளும் கிடைக்கும். நீண்ட நாட்களாக அனுபவித்து வந்த நெருக்கடிகள் பிரச்சனைகள் எல்லாம் விலகும்.

பெண்கள் 
எந்த ஒன்றிலும் ஈடுபாடில்லாமல் வாழ்ந்து வந்த நிலையில் மாற்றம் ஏற்படும். மனதில் நீடித்த குழப்பம் விலகும். உங்கள் தனித்தன்மை வெளிப்படும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று அவரவர் நிலைக்கேற்ற விருப்பம் நிறைவேறும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் குணமாகும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். கணவரின் அன்பு அதிகரிக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். பொன் பொருள் சேரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

கல்வி 
எதிர்காலம் பற்றிய அக்கறை உண்டாகும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர்கள். பொதுத் தேர்விலும் போட்டித் தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைத்து விரும்பிய கல்லூரியில் சேர்வீர்கள்.

உடல்நிலை
ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால், உங்களை அச்சுறுத்தி வந்த நோய்கள் குணமாகும். நீண்ட நாட்களாக மருந்து மாத்திரை என்று வாழ்ந்து வந்த நிலையில் மாற்றம் ஏற்படும். குணமாகாது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் நிலையில் அதிசயமான மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.

குடும்பம்
ஐந்தாண்டுகளாக ஏதேதோ முயற்சி செய்தும் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை, நினைத்தது நடக்கவில்லை என்ற மனக்குறையோடு வாழ்ந்து வந்தவர்களுக்கு இக்காலம் யோக காலமாகும். வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்துகள் சேரும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

பரிகாரம் :தில்லை காளியை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.


விசாகம்: உயர்வு காத்திருக்கு


ஞானக்காரகன் குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதங்களான துலாமில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும், 4 ம் பாதமான விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக சொல்ல முடியாத சங்கடங்களை அனுபவித்து வந்த உங்களுக்கு நடைபெற இருக்கும் சனிப்பெயர்ச்சி எத்தகைய பலன்களை வழங்கப் போகிறது? 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய சனியாகவும்,  4 ம் பாதத்தினருக்கு பூர்வ புண்ணிய சனியாகவும் சஞ்சரிப்பவர்,
மார்ச். 6, 2026 முதல் 1,2,3 ம் பாதத்தினருக்கு மேன்மையான பலன்களை வழங்கிட உள்ளார் என்பதால்
உங்கள் நிலையில் இருந்த சங்கடங்கள் எல்லாம் விலகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும், எதிர்ப்பு, பகை என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் விலகும். உடல்நிலையும் மனநிலையும் சீராகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் உயரும். தொழில் வளர்ச்சியடையும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். 4ம் பாதத்தினருக்கு, குடும்பத்தில் இடையூறு, கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு, தொழிலில் முன்னேற்றமில்லா நிலை, உத்தியோகத்தில் பிரச்சனைகள், மேல் அதிகாரியுடன் விரோதம், நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து வேறுபாடு, கல்வியில் தடைகள் என்று ஏற்படும் என்பது பொதுப்பலன்களாகும். இக்காலத்தில் சுய ஜாதகம் பலமாக இருந்தாலும், நடக்கும் திசா புத்தி சாதகமாக இருந்தாலும் இப்பலன்களில் மாறுபாடு இருக்கும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் பார்வைகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் இக்காலங்களில் நீங்கும். மறைமுகத் தொல்லைகள் விலகும். உடல்நிலை சீராகும். விரயச்செலவுகள் கட்டுப்படும். 4ம் பாதத்தினருக்கு 5ம் இட சனியின் அல்லல்கள் அகலும், இன்னல்கள் விலகும், எடுத்த வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

ராகு - கேது சஞ்சாரம் விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13, 2026 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பண வரவு இருக்கும். செய்துவரும் தொழில் லாபமடையும். புதிய சொத்து சேரும். 4ம் பாதத்தினருக்கு நவ. 13, 2026 முதல் ராகு சகாய ஸ்தானத்தில்  சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைக்குரிய வழி தெரியும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் சுபிட்சமான பலன்கள் கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் வியாபாரம் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். 4ம் பாதத்தினருக்கு மிதுனம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். பொன், பொருள் சேரும். கடகம் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஐந்தாமிட சனியால் ஏற்படும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும்.

பொதுப்பலன் 
இதுவரை நீங்கள் சந்தித்து வந்த போராட்ட நிலை மாறும். எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.

தொழில் 
தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் பிரச்சனைகள் விலகும். தைரியமுடன் செயல்படத் தொடங்குவீர்கள் . இக்காலத்தில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வியாபாரம், ரசாயனத்தொழில்கள், மருத்துவம், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை, இன்ஜினியரிங், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம், ஹோட்டல், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல் ஏஜென்சி, பில்டிங் டிசைனிங், டெக்கரேசன், ஆடை வணிகம், ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை முன்னேற்றமடையும். ஆசிரியர்கள், மத பிரச்சாரகர்கள், மேடைப் பேச்சாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் மற்றும் பொது சேவையில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும்.

பணியாளர்கள்
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் இல்லை, சரியான அங்கீகாரம் இல்லை என்ற நிலைகள் எல்லாம் மாறும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரியின் ஆதரவு உண்டாகும். தினப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு தற்போதுள்ள வேலையை விட நல்ல இடத்தில் எதிர்பார்த்த சம்பளத்துடன் வேலைக் கிடைக்கும்.

பெண்கள்
மனதில் இருந்த குழப்பம், உடலில் ஏற்பட்ட நலிவு விலகும். இதுவரை கிடைத்த அனுபவங்களை எல்லாம் பாடமாகக் கொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். ஆடை ஆபரணம் நவீன பொருட்கள் என்று சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.

கல்வி 
இக்காலத்தில் படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதுடன், கேளிக்கை பொழுதுபோக்கு தவறான நட்புகளை விட்டு விலகி படிப்பில் கவனம் கொள்பவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.

உடல்நிலை
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்த உங்களுக்கு, இக்காலம் அதிலிருந்து விடுபடக்கூடிய காலமாகும். பரம்பரைநோய் தொற்றுநோய் என்று சங்கடப்பட்டு வந்த நிலையெல்லாம் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். பெரிய அளவில் பயமுறுத்தி வந்த நோய்கள் நவீன சிகிச்சையால் கட்டுப்படும்.

குடும்பம்
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். மனதில் இருந்த சங்கடங்கள் குறையும். பெரியோரின் ஆதரவும், குலதெய்வத்தின் அனுகூலமும் உங்கள் நிலையை உயர்த்தும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவுகள் நனவாகும். ஒரு சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகள் விருப்பப்படி அவர்களுடைய மேற்கல்விக்கு வழி அமைப்பீர்கள். உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். ஐந்தாண்டுகளாக அனுபவித்து வந்த நெருக்கடிகள் நீங்கும்.

பரிகாரம்:ஆபத் சகாயேஸ்வரரை வழிபட வாழ்க்கை வளமாகும்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (6.3.2026 முதல் 24.4.2028 வரை) »
temple news
அசுவினி: செலவு அதிகரிக்கும்உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியும், லாபாதிபதியுமான சனி பகவான் இதுவரை லாப ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோக காலம்ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1 ம் பாதமான ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பு உயர்வுதரும்தைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: மாற்றம் காத்திருக்குஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: விழிப்புணர்வு அவசியம்ஞான மோட்சக்காரகன் கேது, ஆத்மக்காரகன் சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar