Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (6.3.2026 முதல் 24.4.2028 வரை)
மீனம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028
எழுத்தின் அளவு:
மீனம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028

பதிவு செய்த நாள்

04 மார்
2026
11:03

பூரட்டாதி: நிதானம் நன்மைதரும்


தன, புத்திரக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும், 4ம் பாதமான மீனத்தில் பிறந்தவர்களுக்கு குருவே ராசிநாதனாகவும் உள்ளனர். மார்ச். 6, 2026 அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆவதால், பூரட்டாதி 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாத சனியாக சஞ்சரிப்பவர், குடும்பத்தில் குழப்பம், எதிர்பாராத சங்கடம், வருமானத்தில் நெருக்கடி, ஆரோக்கியத்தில் குறைபாடு, மறைமுக எதிர்ப்புகள் என்று ஏற்படுத்துவார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியாக சஞ்சரிப்பவர் உடல் நிலையில் பாதிப்பு, மனதில் குழப்பம், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, நண்பர்களுக்குள் பிரிவு, கூட்டுத்தொழிலில் நெருக்கடி, செய்துவரும் உத்தியோகத்தில் பிரச்சனைகள் என்ற நிலையினை உருவாக்குவார் என்றாலும், சுய ஜாதகம் சாதகமாக இருந்தாலும், யோகமான திசா புத்தி நடைபெற்றாலும்  இப்பலன்கள் மாறுபடும். நன்மைகள் அதிகரிக்கும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், பூரட்டாதி 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் ஏழரை சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்களில் இருந்து விடுதலை உண்டாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நிம்மதியான நிலை உருவாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பும் செல்வாக்கும் உயரும்.

ராகு - கேது சஞ்சாரம்
பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, நவ. 13, 2026 முதல் கேது சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்து நன்மைகளை அதிகரிப்பார். ஆரோக்கியத்தை மேம்படுத்துவார். வழக்கு விவகாரங்களில்  சாதகமான நிலையை ஏற்படுத்துவார். 4ம் பாதத்தினருக்கு நவ. 13, 2026 வரை 6ம் இட கேதுவால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். வம்பு வழக்குகள் சாதகமாகும். எதிர்ப்புகள் போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். நவ. 13, 2026 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வருமானம் உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, பூரட்டாதி 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் தடைபட்ட வேலைகள் முடிவிற்குவரும். செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். கல்வி,  திருமணம், குழந்தை பாக்யம், வேலை, வீடு, வாகனம், பட்டம் பதவி என்று அவரவர் நிலைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். கடகம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பாத சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்கள் நெருங்காமல் போகும். 4ம் பாதத்தினருக்கு,  கடகம் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமணம், குழந்தை, வீடு வாசல் ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும். மிதுனம் சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வரவு அதிகரிக்கும். செலவுகள் கட்டுப்படும். அந்தஸ்து உயரும். சமூகத்தில் தனி மதிப்பு உண்டாகும்.

பொதுப்பலன்
குருவின் சஞ்சாரங்கள் மற்றும் பார்வைகளுடன் ராகு, கேதுவும்  இக்காலத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்தவற்றை அடையமுடியும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.  வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வாழ்க்கை வளமாகும்.

தொழில்
தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். அனுபவங்களைக் கொண்டு முன்னேற்றப் பாதையில் நடைபோடுவீர்கள். பணியாளர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். ஜுவல்லரி, ஆடை வணிகம், நிதி நிறுவனம், இயந்திரத்தொழில், வாகன உற்பத்தி ஆட்டோ, மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு, பேக்டரி, ட்ராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் லாபம்தரும்.

பணியாளர்கள் 
ஏழரை சனிக்காலம் என்பதால் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். வேலையில் எதிர்பார்த்த ஊதியமில்லை சலுகைகள் இல்லை என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். வேலைமீதிருந்த பயம் நீங்கும். அரசு பணியில் தற்காலிகமாக இருந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.
சட்டப் பிரச்சனைகளால் பதவி உயர்வு ஏற்படாமல் இடமாற்றம் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு விசாரணை முடிவு சாதகமாகும். எதிர்பார்த்த உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.

பெண்கள்
ஏழரைச்சனியின் காலம் என்பதால் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ சங்கடங்கள் இருக்கும் என்றாலும், மங்களக்காரகன் குரு உங்களைப் பாதுகாப்பார்.  குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். துணிச்சலாக செயல்படுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் நிலையறிந்தும் மனம் அறிந்தும் நடந்து கொள்வர். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.

கல்வி
பொதுத்தேர்விலும் போட்டித்தேர்வுகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதும், ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதும் நன்மையளிக்கும். விரும்பிய கல்லூரியில் எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை 
ஆயுள் காரகன் சனி பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் எதிர்மறையாக இருப்பதால் உடல் நலனில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். உடலில் சிறிய தொந்தரவு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவம் செய்து கொள்வது அவசியம். வாகனப் பயணத்திலும் இயந்திரப் பணியிலும்  விழிப்புணர்வும் எச்சரிக்கையும் உங்களைப் பாதுகாக்கும்.

குடும்பம் 
ராகு, கேது சஞ்சார நிலைகள், குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் பார்வைகள் ஏழரை சனியால் ஏற்படும் பாதிப்புகள் உங்களை நெருங்க விடாமல் பாதுகாக்கும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். இடம் வீடு வாகனம் பொன் பொருள் என்ற கனவை நனவாக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்களை விலக்கும். தம்பதிகளிடம் இணக்கமான நிலையை உண்டாக்கும். வீட்டில் மங்கல ஒலி கேட்கும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கை உயர்த்தும்.

பரிகாரம் :வீரராகவப்பெருமாளை வழிபட வேண்டுதல் நிறைவேறும். வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.


உத்திரட்டாதி: தன்னம்பிக்கை அதிகரிக்கும்


கர்மக்காரகன் சனி, தன, புத்திரக்காரகன் குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வீண் செலவுகளையும், அலைச்சலையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி வந்த சனி பகவான் மார்ச். 6, 2026 அன்று உங்கள் ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து பலன்களை வழங்கிட இருக்கிறார். நம் ஒவ்வொருவரின் கர்ம வினைக்கேற்ப பலன்களை வழங்கிடக்கூடியவர் சனி பகவான். ஏழரை சனியின் மத்திம காலமான இக்காலத்தில்  ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். வருமானத்தில் தடை உண்டாகும். நட்பு வட்டத்தில் விரிசல் ஏற்படும். மனதில் இனம் புரியாத பயம் தோன்றும். கணவன் மனைவிக்குள் இணக்கமற்ற நிலை உருவாகும். செய்துவரும் தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சோதனைகள் அதிகரிக்கும் என்பது பொது விதியாகும். இக்காலத்தில் சுய ஜாதகம் சாதகமாக இருந்தாலும், யோகமான திசா புத்தி நடைபெற்றாலும்  இப்பலன்கள் மாறுபடும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், ஜென்ம சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்கள் யாவும் விலகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கி மனதில் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நினைத்ததை நடத்தி முடித்திடக்கூடிய நிலை உண்டாகும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஜென்ம ராசிக்குள் சனி பகவான் சஞ்சரிக்கும் இக்காலத்தில், நவ. 13, 2026 வரை சத்ரு ஜெய ஸ்தானமான 6ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் எத்தனை சங்கடங்கள் வந்தாலும் அவை உங்களை நெருங்காமல் போகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்ப்புகள் விலகும். எதிரிகள் அடங்குவர். 
உத்தியோகத்தில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். நவ. 13, 2026 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு வருமானத்தை அதிகரிப்பார். வசதி வாய்ப்புகளை ஏற்படுத்துவார். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை உருவாக்குவார். வெளிநாட்டு முயற்சிகளை சாதகமாக்குவார்

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக பூர்வ புன்னிய ஸ்தானமான
கடகம், சப்தம ஸ்தானமான கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஜென்ம சனியால் ஏற்படும் பாதக பலன்கள் உங்களை நெருங்காமல் போகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். உயர்கல்வி, திருமணம், வேலை, குழந்தை, வீடு, ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும்.

பொதுப்பலன்
ராகு, கேது சஞ்சாரங்களும், குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும் இக்காலத்தில் உங்கள் செல்வாக்கை உயர்த்தும். செல்வ செழிப்பை உண்டாக்கும். உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்கும். வாழ்க்கையின் அடிப்படைகளான வீடு, வாகனம், பணம் என்ற எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.

தொழில்
ஜென்ம சனியின் பார்வை தொழில் ஸ்தானத்திற்கு உண்டாவதால் தொழிலில் அக்கறை உண்டாகும். நிதானமாகவும் திட்டமிட்டும் செயல்படுவீர்கள். நிதி நிறுவனம், ஜுவல்லரி, ஷேர் மார்க்கெட், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், ட்ராவல்ஸ், ஹார்டுவேர், மென்பொருள், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் முன்னேற்றம் அடையும்.

பணியாளர்கள் 
ஜீவன ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பார்த்துவரும்  வேலையில் பொறுப்பு அதிகரிக்கும். வேலைபளு கூடும். திறமைக்கேற்ற உயர்வு கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் தங்களுடைய வரம்பிற்குள் செயல்படுவது நன்மையளிக்கும். சிபாரிசு, கவனிப்பு போன்றவற்றிற்கு இடம் கொடுக்காமல் செயல்படுபவர்களுக்கு மரியாதை உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். சிலருக்கு வயிறு, கர்ப்பப்பையில் சங்கடங்கள் உண்டாகும் என்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.  இக்காலத்தில் குடும்பத்தினரின் ஆலோசனை உங்களுக்கு நன்மையளிக்கும். புதிய நட்புகளிடம் ஓரடி விலகி இருப்பதுடன் எந்த ஒன்றாக இருந்தாலும் அதை வாழ்க்கைத் துணையுடன் ஆலோசித்து செயல்படுவது நிம்மதியான நிலையை உருவாக்கும். சுயதொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகளில் கவனமாக இருப்பது அவசியம்.

கல்வி
படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத்தேர்விற்கும், போட்டித்தேர்வுகளுக்கும் தயாராவீர்கள். உயர் கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும். சிலர் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மேற்கல்விக்காக செல்வீர்கள்.

உடல்நிலை 
ஜென்ம ராசிக்குள் ஆயுள் காரகன் சஞ்சரிப்பதுடன், சப்தம ஸ்தானத்தையும் பார்ப்பதால், உடல்நிலையில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றும். கவனிக்காமல் விட்டுவிட்ட நோய்கள் வீரியம் அடையும். பரம்பரை நோய்கள் மீண்டும் தலைதூக்கும். மருத்துவச்செலவு அதிகரிக்கும். உடல் நிலையில் சிறு பாதிப்பு வரும்போதே மருத்துவரை சந்திப்பது நன்மையளிக்கும்.

குடும்பம் 
ராகு, கேது சஞ்சார நிலைகள், குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் பார்வைகளால் கடல் அளவு சங்கடங்கள் வந்தாலும் அது கடுகளவாக மாறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் அமைதி இருக்கும். இடம், வீடு, வாகனம், பொன் பொருள் என்ற வாழ்க்கையின் தேவைகள் இக்காலத்தில் பூர்த்தியாகும். பிள்ளைகளின் கல்வி, வேலை, திருமணம் என்று நீங்கள்  மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். வீட்டில் மங்கல ஒலி கேட்கும்.

பரிகாரம்  சனீஸ்வரருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டுவர சங்கடங்கள் விலகும். வாழ்வில் நன்மை உண்டாகும்.


ரேவதி: ஜென்ம சனியிலும் சாதகம்


வித்யா காரகன் புதன், தன, புத்திரக்காரகன் குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த சனி பகவான் மார்ச். 6, 2026 அன்று உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கிறார். நிதானமாகவும் யோசித்தும் செயல்படக்கூடிய உங்களுக்கு பொதுவாகவே அவசரத்தன்மை இருக்காது, திட்டமிடாமல் எந்தவொரு வேலையிலும் இறங்க மாட்டீர்கள் என்பதால் விரய சனிக்காலத்தை பெரிய அளவில் இழப்பில்லாமல் கடந்திருப்பீர்கள்.
ஜென்ம சனிக்காலத்திலும் ஒவ்வொன்றிலும் உங்களிடம் நிதானம் இருக்கும் என்றாலும், இக்காலத்தில் உங்கள் மன நிலையிலும் உடல்நிலையிலும் சங்கடங்கள் ஏற்படும். எந்தவொரு வேலையிலும் உடனடியாக ஒரு முடிவிற்கு வரமுடியாமல் தடுமாறுவீர்கள். வருமானத்திலும் தடைகள் தாமதம் என்று ஏற்படும். அவசரத்தேவைகளுக்கும் பணம் புரட்ட முடியாமல் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். நன்றாகப்பழகி வந்தவர்கள்கூட இந்த நேரத்தில் உங்களைப்புரிந்து கொள்ளாமல் போவார்கள். வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். தொழில், உத்தியோகத்தில் நெருக்கடி அதிகரிக்கும் என்றாலும் அசாத்தியமான துணிச்சலும் தைரியமும் உங்களை வழிநடத்தும் என்பது ஜென்ம சனியால் உண்டாகும் பலன்களாகும். இக்காலத்தில் சுய ஜாதகம் சாதகமாக இருந்தாலும், யோகமான திசா புத்தி நடைபெற்றாலும்  யோகப்பலன்கள் கூடுதலாகும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், ஜென்ம சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் நெருக்கடிகள் போராட்டங்கள் யாவும் முடிவிற்குவரும். எடுக்கும் வேலைகள் லாபமாகும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவடையும் நினைத்ததை நடத்தி முடிக்க முடியும். கையில் பணம் புழங்கும்.

ராகு - கேது சஞ்சாரம் 
நவ. 13, 2026 வரை 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உங்கள் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்ப்புகள் விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். நவ. 13, 2026 முதல் யோகக்காரகனான ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொழில் லாபம்தரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். நினைத்த வேலைகளை நடத்தி முடிக்க முடியும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக
கடகம், கன்னியில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலங்களில் ஜென்ம சனிக்கு குரு பகவானின் பார்வை உண்டாவதால் சனியால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். உயர்கல்வி, திருமணம், வேலை, குழந்தை, வீடு, ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும். மிதுனம் சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் தடைபட்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.

பொதுப்பலன் 
ஜென்ம சனியின் காலம் என்றாலும், குரு, ராகு, கேது சஞ்சார நிலைகள் சாதகமாக இருப்பதால், தடைபட்ட வேலைகள் நடந்தேறும். கிடைக்காமல் போனதெல்லாம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீடு வாசல் பொன் பொருள் வாகனம் என்ற கனவுகள் நனவாகும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு தகுதியான வேலைக் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உண்டாகும்.

தொழில்
தொழில் காரகனான சனி பகவான் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.
ஷேர் மார்க்கெட், எக்ஸ்போர்ட், பைனான்ஸ், ஜுவல்லரி, காண்ட்ராக்ட்,  ரியல் எஸ்டேட், பதிப்பகம், அச்சகம், செய்தித்தாள், தனியார் பள்ளிகள், ஆன்லைன் வர்த்தகம், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முன்னேற்றம் அடையும்.

பணியாளர்கள் 
பணிபுரியும  இடத்தில்  வேலைபளு கூடும். கவனமாக செயல்படக்கூடிய உங்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச் செல்வதுடன் உடன் பணிபுரிபவர்களையும் அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். பலமுறை முயற்சித்தும் கிடைக்காத இடமாற்றம் கிடைக்கும். நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
ஜென்ம சனியின் காலமான இக்காலத்தில் அனைத்திலும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நன்மையளிக்கும். குடும்பத்தினர் ஆலோசனைகள் உங்களைப் பாதுகாக்கும். நட்பு என்ற பெயரில் உங்களை நெருங்குபவர்களை விலக்கி வைப்பதால் உங்கள் கௌரவம் நிலைக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையாகும். சுயதொழில் செய்து வருபவர்கள் சந்தை நிலவரத்தை அறிந்து செயல்படுவது அவசியம்.

கல்வி
எதிர்காலத்தை மனதில் எண்ணி செயல்படக்கூடிய உங்களுக்கு இயல்பாகவே படிப்பில் அக்கறை இருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பீர்கள். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரியில், விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்வீர்கள்

உடல்நிலை 
ஜென்ம ராசிக்குள் ஆயுள்காரகன் சஞ்சரிப்பதால் உடல்நிலை ஒருநேரம் இருப்பதுபோல் மறுநேரம் இல்லாமல் போகும் என்றாலும் மருத்துவ சிகிச்சையால் குணமடைவீர்கள். நரம்புக்கோளாறு, ரத்தக்குழாய் அடைப்பு, சுவாசநோய், தொற்றுநோய், பரம்பரைநோய் என்று சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு ஆரோக்கியம் சீராகும்.

குடும்பம்  
குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நெருக்கடிகள் நீங்கி சுபிட்சமான நிலை உண்டாகும். தைரியமாக செயல்பட்டு எதிர்பார்த்ததை அடைவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் ஒற்றுமையும் முன்னேற்றமும் இருக்கும். இடம், வீடு, வாகனம், பொன் பொருள் என்ற வாழ்க்கையின் தேவைகள் பூர்த்தியாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். வீட்டில் மங்கல ஒலி கேட்கும்.

பரிகாரம் சுவேதாரண்யேசுவரரை அர்ச்சனை செய்து வணங்கி வருவதுடன் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை உண்டாகும்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (6.3.2026 முதல் 24.4.2028 வரை) »
temple news
அசுவினி: செலவு அதிகரிக்கும்உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியும், லாபாதிபதியுமான சனி பகவான் இதுவரை லாப ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோக காலம்ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1 ம் பாதமான ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பு உயர்வுதரும்தைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: மாற்றம் காத்திருக்குஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: விழிப்புணர்வு அவசியம்ஞான மோட்சக்காரகன் கேது, ஆத்மக்காரகன் சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar