Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028 மீனம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028 மீனம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (6.3.2026 முதல் 24.4.2028 வரை)
கும்பம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028
எழுத்தின் அளவு:
கும்பம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028

பதிவு செய்த நாள்

04 மார்
2026
11:03

அவிட்டம்: முன்னேற்றம் உண்டாகும்


ரத்தக்காரகன், யுத்தக்காரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்கள் மகர ராசியினராகவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசியினராகவும், இருவருக்கும் சனி பகவானே ராசிநாதனாவார்.
அவிட்டம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச். 6, 2026 முதல் பாத சனி விலகுவதால் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும், ஏழரை ஆண்டுகளாக சந்தித்து வந்த போராட்ட நிலை மாறும். விருப்பங்கள் பூர்த்தியாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனிக்காலம் முடிவடைந்து பாத சனிக்காலம் தொடங்குவதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகும்.  உழைப்பு அதிகரிக்கும், உடல்நிலை சோர்வடையும், மறைமுகத்தொல்லைகளால் மனம் சங்கடத்திற்கு ஆளாகும் என்றாலும் வருமானம் அதிகரிக்கும். பெரியோரின் துணைக்கிடைக்கும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். பிள்ளைகள் பற்றிய கவலை விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாத சனியின் பாதிப்பு விலகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். எடுக்கும் வேலைகள் ஜெயமாகும். 

ராகு - கேது சஞ்சாரம் அவிட்டம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13, 2026 வரை ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும் சஞ்சரித்து, நவ. 13, 2026 முதல் ராகு ராசிக்குள்ளும், கேது 7ம் இடத்திலும் சஞ்சரிப்பார்கள் என்பதால், குடும்பம், பணம், தொழில், உத்தியோகம், உடல்நிலை, நட்பு என்று அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 2026 முதல் கேது சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்து அனைத்திலும் வெற்றியை உண்டாக்குவார். சட்டசிக்கல்கள் விலகும். எதிர்ப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். வழக்கு சாதகமாகும். ஆரோக்கியம் மேம்படும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில்  செல்வாக்கு, பட்டம், பதவி, அந்தஸ்து உண்டாகும். திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும்.  புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையிலும் பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் செலவுகள் குறையும், உடல்நிலை சீராகும், பணப்புழக்கம் அதிகரிக்கும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். நீண்டநாள் கனவுகள் பூர்த்தியாகும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். கடகம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பாத சனியால் ஏற்படும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும்.

பொதுப்பலன்
அவிட்டம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சகாய சனியும் குரு பகவானும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குரு பகவானின் சஞ்சாரங்களும் பார்வைகளும், நவ. 13, 2026 முதல் ஆறாமிட கேதுவும் சாதகமான பலன்களை வழங்குவர். ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலை உயரும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும்.

தொழில்
தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், இயந்திரத்தொழில், வாகன உற்பத்தி, உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், வாகன விற்பனை, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் வருமானம்தரும்

பணியாளர்கள் வேலையில் இருந்த சங்கடங்கள், போராட்ட நிலைகள் மாறும். பணிபுரியும் இடத்தில் திறமைக்குரிய மதிப்புண்டாகும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
உடல் நிலையிலும் மன நிலையிலும் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று அவரவர் தேவைக்கேற்றவை பூர்த்தியாகும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வெளியூரில் வேலைப் பார்ப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு மாறுதல் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பொருள் சேரும்.

கல்வி 
படிப்பில் கூடுதல் கவனமும் அக்கறையும் தேவைப்படும். மொபைல் மற்றும் தவறான நட்புகளை இக்காலத்தில் தள்ளி வைப்பதும், ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதும், கடின உழைப்பும் எதிர்பார்த்த மதிப்பெண்பெற வழிவகுக்கும்.

உடல்நிலை 
1,2ம் பாதத்தினருக்கு ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மருத்துவச்செலவுகள் குறையும், 3,4ம் பாதத்தினருக்கு பரம்பரை நோய், பாரம்பரிய நோய் என்று ஏற்படுவதுடன் விபத்துகளையும் சந்தித்திடக்கூடிய நிலை இருப்பதால் வாகனப்பயணத்திலும், இயந்திரப்பணியிலும் எச்சரிக்கை அவசியம்.

குடும்பம்
குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். வேலையின் காரணமாகவும் கருத்து வேறுபாடுகளாலும் பிரிந்திருந்தவர்கள் ஒன்றாக வசிக்கும் நிலையுண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். நீண்டநாள் கனவு நனவாகும். பிள்ளைகளின் உயர்கல்வி திருமண முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.

பரிகாரம் வைத்தியநாதசுவாமியை வழிபட சங்கடங்கள் விலகும். வாழ்வில் வளம் உண்டாகும்.


சதயம்: எச்சரிக்கை அவசியம்


யோகக்காரகன் போகக்காரகன் ராகு, ஆயுள் மற்றும் கர்மக்காரகன் சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, இதுவரை உங்கள் ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து ஆரோக்கியத்தில் சங்கடம், வருமானத்தில் தடை, குடும்பத்தில் நெருக்கடி, எதிர்பாலினரால் பிரச்சனைகள், தொழிலில் தேக்கம், மன உளைச்சல் என்று எதிர்மறையான பலன்களை வழங்கிவந்த சனி பகவான் மார்ச். 6, 2026 அன்று உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான மீனத்தில் பாத சனியாக சஞ்சரிக்கப் போகிறார். சனிபகவான் ராசியை விட்டு விலகுவதாலும் அவருடைய பார்வைகள் களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தானங்களை விட்டு நகர்வதாலும் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சூழ்நிலையின் காரணமாக விலகி இருந்தவர்களும் மீண்டும் இணைந்து வாழ்ந்திடக்கூடிய நிலை உண்டாகும். செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் உழைப்பின் காரணமாக ஆரோக்கியத்தில் சங்கடங்கள் ஏற்படும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், பாத சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடமான பலன்கள் விலகும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். உடல்நிலை சீராகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்
நவ. 13, 2026 முதல் ராகு ராசியை விட்டு விலகுவதும், கேது களத்திர நட்பு ஸ்தானத்தை விட்டு சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கும். 6ம் இட கேது உங்கள் ஆற்றலை அதிகரிப்பார். ஆரோக்கியத்தை மேம்படுத்துவார். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார். தலைநிமிர்ந்து உங்களை நடைபோட வைப்பார்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, பூர்வ புண்ணிய ஸ்தானமான மிதுனத்திலும், களத்திர ஸ்தானமான சிம்மத்திலும் சஞ்சரிக்கும் காலங்களில் உங்கள் செல்வாக்கு உயரும். ஆயிரம் யானைகளுக்கு மத்தியில் சிங்கம்போல் உலா வருவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உயர்கல்வி,  திருமணம், குழந்தை பாக்யம், வேலை, வீடு, வாகனம், பட்டம் பதவி என்று அவரவர் நிலைக்கேற்ப பலன்கள் கிடைக்கும். கடகம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பாத சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். உடல்நிலை சீராகும். மறைந்திருந்த உங்கள் திறமையும் செல்வாக்கும் வெளிப்படும்.

பொதுப்பலன்
குரு பகவானின் சஞ்சாரங்களும் பார்வைகளும், நவ. 13, 2026 முதல் ஆறாமிட கேதுவும் இக்காலத்தில் உங்களை அரண்போல் பாதுகாத்து ஆற்றலுடன் நடைபோட வைப்பார்கள். உங்கள் நீண்டநாள் கனவுகள் நனவாகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும்.

தொழில்
தொழில்காரகன் சனி பகவானின் பார்வை லாப ஸ்தானத்திற்கு கிடைப்பதால் நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் இனி லாபமடையும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி, நிதி நிறுவனம், சினிமா, தொலைக்காட்சி, மெடிக்கல், கெமிக்கல், ரசாயனம், இயந்திரத்தொழில் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு, வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, ஜூவல்லரி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஆன்லைன் வர்த்தகம், ஆட்டோ மொபைல்ஸ் தொழில்கள் வளர்ச்சி அடையும்.

பணியாளர்கள் 
ஜென்ம சனி விலகுவதால் உங்களுக்கிருந்த மந்தநிலை மாறும். வேலையிலும் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்துவீர்கள். உழைப்பிற்கேற்ற மரியாதைக்கிடைக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் உங்கள் கோரிக்கைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். 

பெண்கள்
பாத சனியின் காலம் என்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வதும், வார்த்தைகளில் கவனமாக இருப்பதும் நன்மையாகும். சுகம் மற்றும் அஷ்டம ஸ்தானங்களை சனி பகவான் பார்ப்பதால் உங்கள் உடல் நிலையிலும், மாங்கல்யக்காரகனின் நலத்திலும் கூடுதல் அக்கறை செலுத்தி வரவேண்டும். முடிந்தவரை கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தின் பொறுப்பு சிலருக்கு அதிகரிக்கும். அதே நேரத்தில் பணப்புழக்கம் இருக்கும். பொன் பொருள் சேரும்.

கல்வி 
ஐந்தாமிட குருவால் படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பீர்கள். பொதுத்தேர்விலும், போட்டித் தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலர் உயர்கல்விக்காக வெளிமாநிலம், வெளிநாடு என்று சேர்வீர்கள்.

உடல்நிலை 
ஏழரை சனியின் பாத சனிக்காலம் என்பதுடன், சுகம் மற்றும் அஷ்டம ஸ்தானங்களுக்கு இக்காலத்தில் சனி பகவானின் பார்வை உண்டாவதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். குணமாகி விட்டதாக நினைத்திருந்த நோய்கள் மீண்டும் தலைக்காட்டும். பரம்பரை நோய், பாரம்பரிய நோய் என்றும் சங்கடப்படுத்தும். சிலர் விபத்துகளையும் சந்திக்க வேண்டிய நிலை இருப்பதால் வாகன இயக்கம் மற்றும் இயந்திரப்பணிகளில் நிதானம் தேவை.

குடும்பம்
குடும்ப ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரித்தாலும், மங்களக்காரகன் குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தவறான நபர்களை விட்டு விலகுவீர்கள். தன்குடும்பம் தன்பிள்ளை என்ற அக்கறை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் வீடு மனை வாகனம் என்று சேரும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிதலுடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளின் உயர்கல்வி திருமண முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.

பரிகாரம்  :அங்காள பரமேஸ்வரியை வழிபட வாழ்வில் நன்மைகள் உண்டாகும். சங்கடங்கள் விலகும்.


பூரட்டாதி:நிதானம் நன்மை தரும்


தன, புத்திரக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும், 4ம் பாதமான மீனத்தில் பிறந்தவர்களுக்கு குருவே ராசிநாதனாகவும் உள்ளனர். மார்ச். 6, 2026 அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆவதால், பூரட்டாதி 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாத சனியாக சஞ்சரிப்பவர், குடும்பத்தில் குழப்பம், எதிர்பாராத சங்கடம், வருமானத்தில் நெருக்கடி, ஆரோக்கியத்தில் குறைபாடு, மறைமுக எதிர்ப்புகள் என்று ஏற்படுத்துவார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியாக சஞ்சரிப்பவர் உடல் நிலையில் பாதிப்பு, மனதில் குழப்பம், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, நண்பர்களுக்குள் பிரிவு, கூட்டுத்தொழிலில் நெருக்கடி, செய்துவரும் உத்தியோகத்தில் பிரச்சனைகள் என்ற நிலையினை உருவாக்குவார் என்றாலும், சுய ஜாதகம் சாதகமாக இருந்தாலும், யோகமான திசா புத்தி நடைபெற்றாலும்  இப்பலன்கள் மாறுபடும். நன்மைகள் அதிகரிக்கும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், பூரட்டாதி 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் ஏழரை சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்களில் இருந்து விடுதலை உண்டாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நிம்மதியான நிலை உருவாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பும் செல்வாக்கும் உயரும்.

ராகு - கேது சஞ்சாரம்
பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, நவ. 13, 2026 முதல் கேது சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்து நன்மைகளை அதிகரிப்பார். ஆரோக்கியத்தை மேம்படுத்துவார். வழக்கு விவகாரங்களில்  சாதகமான நிலையை ஏற்படுத்துவார். 4ம் பாதத்தினருக்கு நவ. 13, 2026 வரை 6ம் இட கேதுவால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். வம்பு வழக்குகள் சாதகமாகும். எதிர்ப்புகள் போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். நவ. 13, 2026 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வருமானம் உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, பூரட்டாதி 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் தடைபட்ட வேலைகள் முடிவிற்குவரும். செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். கல்வி,  திருமணம், குழந்தை பாக்யம், வேலை, வீடு, வாகனம், பட்டம் பதவி என்று அவரவர் நிலைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். கடகம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பாத சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்கள் நெருங்காமல் போகும். 4ம் பாதத்தினருக்கு,  கடகம் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமணம், குழந்தை, வீடு வாசல் ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும். மிதுனம் சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வரவு அதிகரிக்கும். செலவுகள் கட்டுப்படும். அந்தஸ்து உயரும். சமூகத்தில் தனி மதிப்பு உண்டாகும்.

பொதுப்பலன்
குருவின் சஞ்சாரங்கள் மற்றும் பார்வைகளுடன் ராகு, கேதுவும்  இக்காலத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்தவற்றை அடையமுடியும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.  வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வாழ்க்கை வளமாகும்.

தொழில்
தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். அனுபவங்களைக் கொண்டு முன்னேற்றப் பாதையில் நடைபோடுவீர்கள். பணியாளர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். ஜுவல்லரி, ஆடை வணிகம், நிதி நிறுவனம், இயந்திரத்தொழில், வாகன உற்பத்தி ஆட்டோ, மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு, பேக்டரி, ட்ராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் லாபம்தரும்.

பணியாளர்கள் 
ஏழரை சனிக்காலம் என்பதால் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். வேலையில் எதிர்பார்த்த ஊதியமில்லை சலுகைகள் இல்லை என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். வேலைமீதிருந்த பயம் நீங்கும். அரசு பணியில் தற்காலிகமாக இருந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.
சட்டப் பிரச்சனைகளால் பதவி உயர்வு ஏற்படாமல் இடமாற்றம் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு விசாரணை முடிவு சாதகமாகும். எதிர்பார்த்த உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.

பெண்கள்
ஏழரைச்சனியின் காலம் என்பதால் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ சங்கடங்கள் இருக்கும் என்றாலும், மங்களக்காரகன் குரு உங்களைப் பாதுகாப்பார்.  குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். துணிச்சலாக செயல்படுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் நிலையறிந்தும் மனம் அறிந்தும் நடந்து கொள்வர். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.

கல்வி
பொதுத்தேர்விலும் போட்டித்தேர்வுகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதும், ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதும் நன்மையளிக்கும். விரும்பிய கல்லூரியில் எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை 
ஆயுள் காரகன் சனி பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் எதிர்மறையாக இருப்பதால் உடல் நலனில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். உடலில் சிறிய தொந்தரவு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவம் செய்து கொள்வது அவசியம். வாகனப் பயணத்திலும் இயந்திரப் பணியிலும்  விழிப்புணர்வும் எச்சரிக்கையும் உங்களைப் பாதுகாக்கும்.

குடும்பம் 
ராகு, கேது சஞ்சார நிலைகள், குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் பார்வைகள் ஏழரை சனியால் ஏற்படும் பாதிப்புகள் உங்களை நெருங்க விடாமல் பாதுகாக்கும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். இடம் வீடு வாகனம் பொன் பொருள் என்ற கனவை நனவாக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்களை விலக்கும். தம்பதிகளிடம் இணக்கமான நிலையை உண்டாக்கும். வீட்டில் மங்கல ஒலி கேட்கும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கை உயர்த்தும்.

பரிகாரம்  வீரராகவப்பெருமாளை வழிபட வேண்டுதல் நிறைவேறும். வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (6.3.2026 முதல் 24.4.2028 வரை) »
temple news
அசுவினி: செலவு அதிகரிக்கும்உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியும், லாபாதிபதியுமான சனி பகவான் இதுவரை லாப ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோக காலம்ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1 ம் பாதமான ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பு உயர்வுதரும்தைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: மாற்றம் காத்திருக்குஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: விழிப்புணர்வு அவசியம்ஞான மோட்சக்காரகன் கேது, ஆத்மக்காரகன் சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar