Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் ... கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் சனிப்பெயர்ச்சி ஹோமம் கூடலுார் கூடல் சுந்தரவேலவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

07 மார்
2026
08:03

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சியையொட்டி, சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நேற்று நடந்தது.


ரிஷிவந்தியத்தில் உள்ள சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சனி பகவான் கிழக்கு நோக்கிய திசையில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பகவான் நேற்று காலை 8.24 மணியளவில் கும்ப ராசியிலிருந்து மீனராசிக்கு பிரவேசித்தார். சனி பெயர்ச்சியொட்டி, சனி பகவான் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நாகராஜ், சோமு குருக்கள் பூஜைகளை செய்தனர். கட்டளைதாரர்கள் கந்தவிலாஸ் ஜெயக்குமார் குடும்பத்தினர் பூஜைக்கான ஏற்பாடுகளையும், கோவில் எழுத்தர் விமல் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினையும் செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று எள் தீபமேற்றி, சுவாமி வழிபாடு செய்தனர். பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் பன்னிரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar