இன்று மாட்டுப்பொங்கல்: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2013 09:01
மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் ஏன்? விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது நமது அன்றாடப் பணி. வேறெந்த மிருகத்திற்கும் இல்லாத தனித்தன்மை பசுவுக்குண்டு. தாய்மையை வெளிப்படுத்தும் விதமாக பசு மட்டுமே "மா என கத்தும். "மா என்பது அம்மாவின் சுருக்கமே. மனிதராகப் பிறந்த அனைவருக்கும் தாய் ஒருத்தி இருப்பாள். அவள் கூட சிறுவயதில் மட்டுமே பால் கொடுத்து அன்பு காட்டுகிறாள். ஆனால், மனிதனின் வாழ்நாளெல்லாம் பசு பால் கொடுத்து உதவுகிறது. வாழும் காலத்தில் மட்டுமல்ல! மனிதன் இறந்த பின்னும், இரண்டாம் நாள் சடங்கில் பாலூற்றி வழிபடுவர். நம் தாயாக விளங்கும் பசுவை "கோமாதா என வணங்குகிறோம். இதே போல, காளை வயலை உழுது, நாம் சாப்பிடுவதற்கு வித்திடுகிறது. உழைப்பின் சின்னமான அதை, சிவன் தனது வாகனமாகக் கொண்டுள்ளார். தன் மனைவி பார்வதியுடன் காளையில் அமர்ந்தே அடியார்களுக்கு? "ரிஷபாரூடராக காட்சி தருகிறார். பசுவுக்கும், காளைக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுகிறோம். உழவுக்கும் தொழிலுக்கும் மரியாதை செய்யும் விதமாக பசுக்களை நீராட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அழகுபடுத்தி, தெய்வமாக வழிபாடு செய்கிறோம்.