மயிலம் முருகன் கோவிலில் இன்று பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2026 01:03
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது.
அதனையொட்டி, இன்று 23ம் தேதி அதிகாலை 4:00 முதல் 5:00 மணிவரை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
மயிலம் 20ம் பட்ட ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் காலை 5:00 முதல் 6:00 மணிக்குள் கொடிமரத்தில் கொடியேற்றி விழாவை துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து காலை 11:00 மணிக்கு வெள்ளி விமானத்தில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி கிரிவலம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு வெள்ளி நாக வாகனத்தில் உற்சவர் அருள்பாலிக்கிறார்.
வரும் 27ம் தேதி இரவு 8:00 மணிக்கு தங்க மயில் வாகனத்திலும், 30ம் தேதி வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து வெள்ளி குதிரை வாகனத்தில் மலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வரும் மார்ச் 31ம் தேதி காலை 6:00 மணிக்கு துவங்குகிறது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுக்கின்றனர்.
தொடர்ந்து 1ம் தேதி காலை 9:00 மணிக்கு தீர்த்த வாரியும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 2ம் தேதி முத்து பல்லக்கில் சுவாமி கிரிவலம் நடக்கிறது.