மூணாறு; மூணாறில் சக்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது.
நகரின் மையப்பகுதியில் உள்ள கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன்தினம் விக்னேஷ்வர பூஜை, கிராம வாஸ்து ஹோமம், திருஷ்டி பூஜை, சுத்தி கலச பூஜை உள்பட பல்வேறு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தன. நேற்று காலை கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது. அதன்பிறகு விநாயகருக்கு 16 வகை அபிஷேகங்கள், தீபாராதனை ஆகியவற்றுடன் சிறப்பு பூஜை நடந்தது. கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்று விநாயகரை வழிபட்டனர். கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. விழாக்கான ஏற்பாடுகளை கோயில் முக்கியஸ்தர்கள் பழனிசாமி, விஜயகுமார், செல்வம், ஆனந்த், கண்ணன் ஆகியோர் செய்தனர்.