பதிவு செய்த நாள்
23
மார்
2026
05:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, அங்கலகுறிச்சி சமுக்தியாம்பிகை, காலசம்ஹார பைரவர், சரபேஸ்வரர், தன்வந்திரி பெருமாள், யோக நரசிம்மர், மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 19ம் தேதி குருகணபதி பூஜையுடன் துவங்கியது. கடந்த, 20ம் தேதி மஹா கணபதி ேஹாமம், விஷ்ணு பூஜை, உச்ச பூஜை, சிறப்பு ேஹாம பூஜைகள் நடைபெற்றன.
கடந்த, 21ல் கணபதி ேஹாமம், பிம்ப சக்தி கலச பூஜை, மகா பிரம்ம கலச பூஜை, அதிவாச ேஹாமம், கலாசபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை, கணபதி ேஹாமம், உஷ பூஜை, பஞ்சவிம்ஷதி கலசாபிேஷகம், 108 திவ்ய கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதன்பின், காலை, 9:15 மணி முதல், 11:15 மணி வரை காலசம்ஹார பைரவர், சரபேஸ்வரர், தன்வந்திரி பெருமாள், யோக நரசிம்மர், மகாலட்சுமி சன்னதிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பிரம்ம கலசம் புறப்பாடு, காலை, 11:30 மணிக்கு சமுக்தியாம்பிகை மூலாலய விமான மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, தேவ பிரதிஷ்டை, உச்ச பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.