பதிவு செய்த நாள்
15
ஜன
2013
10:01
அலகாபாத்: உ.பி., மாநிலம் அலகாபாத்தில், மகா கும்பமேளா, நேற்று துவங்கியது. மகா சங்கராந்தியையொட்டி, ஆயிரக்கணக்கான சாதுக்கள், பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.உ.பி., மாநிலம் அலகாபாத், திரிவேணி சங்கமத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மகா கும்பமேளா நடக்கிறது. இதில், புனித நீராடுவதை, மிகப் பெரிய பாக்கியமாக, பக்தர்களும், சாதுக்களும் கருதுகின்றனர். இந்தாண்டுக்கான, மகா கும்பமேளா, மகாசங்கராந்தி தினமான, நேற்று துவங்கியது. நாடு முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான சாதுக்களும், பக்தர்களும், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில், புனித நீராடினர். கங்கையாற்றின் அனைத்து படித் துறைகளிலும், பெரும் கூட்டம் காணப்பட்டது.அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அலகபாத்தில், நேற்று காலையில் கடும் குளிர் அடித்போதும், அதை பொருட்படுத்தாமல், பக்தர்கள் அதிகாலையிலேயே, புனித நீராடினர். நேற்று துவங்கிய, மகா கும்பமேளா, வரும், மார்ச், 10 வரை நடக்கவுள்ளது. இதில், கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, புனித நீராடுவர்.
கும்பமேளா வரலாற்று சிறப்புகள்..