மதுரை; மதுரை, பைபாஸ் சாலை மற்றும் அம்மன் சந்நிதி தெரு, ஸ்ரீ சிருங்கேரி சங்கர மட வளாகத்தில் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் 76வது வர்தந்தி வைபவம் இன்று நடைபெற்றது.
விழானை முன்னிட்டு xசிருங்கேரி மடத்தில் இன்று காலை 6-00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, நவக்ரஹ ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம், ஸ்ரீ ஸ்ரீ ஆசார்யாளின் பாதுகைகளுக்கும், ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வரர் ஸ்வாமிக்கும் ஸ்ரீ ருத்ர ஏகாதசினி ஜபம், அபிஷேகம், அர்ச்சனை மற்றும் ஸ்ரீ ருத்ர ஹோமம், வஸோர்தாரா, பூர்ணாஹுதி, மஹாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பாக நடைபெற்ற இந்த வர்தந்தி வைபவ நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மஹாஸந்நிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள், ஸந்நிதானம் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ மஹாஸ்வாமிகளின் ஆசி பெற்றனர்.