சிவகலா ஷேத்ரா கலை கூடத்தின் சலங்கை பூஜை, அரங்கேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2026 04:03
சின்னசேலம்: சின்னசேலத்தில் சிவகலா ஷேத்ரா பரதநாட்டியம் கலைக்கூடத்தின் சலங்கை பூஜை மற்றும் அரங்கேற்றம் நடந்தது.
சின்னசேலம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் சிவகலா ஷேத்ரா பரதநாட்டியம் கலைக்கூடம் சார்பில் நடந்த சலங்கை பூஜை மற்றும் அரங்கேற்றம் விழாவிற்கு நடன ஆசிரியர் உமா மகேஸ்வரி அருண்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு விஜய் மற்றும் பத்மா சீனிவாசன் ஆகியோர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாணவிகள் யாஷிகா, யாழ்நிலா, திரிஷா, ஷிவன்யா, மிருதுளாஸ்ரீ, லாவிகாஸ்ரீ, ஷிவானி, கவினா ஆகியோர்களின் அரங்கேற்றம் பத்து விதமான நடனங்களுடன் நடந்தது. முன்னதாக மாணவிகளின் சலங்கை பூஜை நடந்தது. விழாவில் நடனம் அரங்கேற்றிய மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.