திருப்பரங்குன்றம் கோயிலில் அன்னதானத்திற்கு விறகு அடுப்பு பயன்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2026 06:03
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினம் 125 பேருக்கு கோயில் அன்னதான கூடத்திலும், சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயிலில் 50 பக்தர்களுக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. சமையலுக்காக காஸ் அடுப்பு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் போர் காரணமாக காஸ் கட்டுப்பாடு உள்ள நிலையில் அன்னதான சாப்பாடு விறகு அடுப்புகளால் தயாரிக்கப்பட்டு வருகிறது.