கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் ராமநவமி வழிபாடு நடந்தது. கடலுார், திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரில் வலம்புரி அற்புத விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, ராமநவமியை முன்னிட்டு பக்த ஆஞ்சநேயருக்கு இன்று காலை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, தீபாராதனை நடந்தது. பக்த ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.