Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அதிகார நந்தியின் சிறப்பு சித்தாபூரில் குடிகொண்டுள்ள பரசுராமரின் தாயார் சித்தாபூரில் குடிகொண்டுள்ள ...
முதல் பக்கம் » துளிகள்
அறுபத்து மூவர் விழாவில் பூம்பாவை உயிர்ப்பித்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அறுபத்து மூவர் விழாவில் பூம்பாவை உயிர்ப்பித்தல்

பதிவு செய்த நாள்

30 மார்
2026
12:03

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடக்கும் பங்குனிப் பெருவிழாவில் அறுபத்து மூவர் உற்சவத்தில் மிகவும் சிறப்புடைய ஒன்று, ‘பூம்பாவையை உயிர்ப்பித்தல்’ நிகழ்வு.

ஏழாம் நுாற்றாண்டில், சிவனேசன் என்ற வணிகர் வசித்து வந்தார். அவர், தன் மகள் பூம்பாவை மீது பேரன்பு கொண்டிருந்தார். அவளை சிறந்த சிவனடியாரான திருஞான சம்பந்தருக்கு மணம் முடிக்கவும் விரும்பினார்.

ஒரு நாள் பூம்பாவை நந்தவனத்தில் மலர்களை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது, நாகம் ஒன்று தீண்டியதால் இறந்துபோனாள். பூம்பாவையின் உடலை தகனம் செய்த சிவனேசன், மகளின் எலும்பு, சாம்பல் ஆகியவற்றை ஒரு மண் குடத்தில் வைத்து பாதுகாத்து வந்தார்.

சிறிது காலத்திற்கு பின், திருஞான சம்பந்தர் கபாலீஸ்வரரை தரிசிக்க வந்தார். அப்போது, சிவனேசன் தன் விருப்பத்தையும், மகளின் நிலையையும் சம்பந்தரிடம் எடுத்து கூறினார்.

இதைக்கேட்டு, வருத்தமடைந்த திருஞான சம்பந்தர், கபாலீஸ்வரரை மனதில் நினைத்து, ‘மட்டிட்ட புன்னையங்கானல் மாடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீசரம் அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திரப் பல்கணத்தார்க்கு அட்டிட்டல் காணாதே போதிய பூம்பாவாய்...’ எனத் துவங்கும், 11 பதிகங்கள் மனமுருகப் பாடினார்.

இதில், மனம் குளிர்ந்த இறைவனின் அருளால், மண்பானையில் அஸ்தியாக இருந்த பூம்பாவை உயிர்த்தெழுந்தாள் என, கூறப்படுகிறது.

சம்பந்தரிடம், தன் மகளை திருமணம் செய்யும்படி, சிவனேசன் வேண்டினார். ஆனால், பூம்பாவையை மீண்டும் உயிர்ப்பித்து கொடுத்ததால், அவளுக்கு தான் தகப்பனாகிப் போனதாக கூறி, சம்பந்தர் மறுத்துவிட்டார்.

இந்நிகழ்வு, கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவின் பிரதான நிகழ்வான அறுபத்து மூவர் உற்சவத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar