தொட்டிச்சி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2026 04:03
மேலூர்; சொக்கம்பட்டி தொட்டிச்சி அம்மன் கோயில் பங்குனி மாத திருவிழா இன்று நடந்தது. மேலூர் மெயின் ரோட்டில் உள்ள பிள்ளையார் கோயிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், அழகுகுத்தியும் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். இவ்விழாவில் சொக்கம்பட்டியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.