கச்சிராயபாளையம்; மாத்தூர் கிராமத்தில் பங்குனி உத்திரத்தை ஒட்டி தேர் திருவிழா இன்று நடந்தது. கச்சிராயபாளையம் அடுத்த மாத்தூர் கிராமத்தில் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த 23 ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடத்தப்பட்டது. முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து உற்சாகத்துடன் இழுத்துச் சென்றனர்.