சென்னை: சென்னையில் பிரசித்தி பெற்ற மருந்தீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி சந்திரசேகரர் உடனுறை திரிபுரசுந்தரி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறபப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் அதிகார நந்தி சேவையும், 29ம் தேதி காலை 7:10 மணிக்கு சந்திரசேகரர் தேர்திருவிழாவும், பிரம்மனுக்கு காட்சியருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று பரிவேட்டை விழா நடைபெற்றது. தொடர்ந்து இன்று 31ம் தேதி சந்திரசேகரர் உடனுறை திரிபுரசுந்தரி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் கடைசி நாளான ஏப்., 2ம் தேதி சந்திரசேகர் தெப்பத் திருவிழா, வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா, 18 திருநடன காட்சி, பெருஞ்சிறப்பு விழா ஆகியவை நடக்கிறது.