பதிவு செய்த நாள்
16
ஜன
2013
10:01
கூடலூர்: மலையில் நடந்த பொங்கல் விழாவில், வளர்ப்பு யானை, மற்றொரு யானையை தாக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், நேற்று பொங்கல் விழா நடந்தது. விநாயகர் கோவிலில், வளர்ப்பு யானைகள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டன. இந்நிலையில், சேரன் என்ற யானை, உதயனை, திடீரென தாக்கியது. மற்ற யானைகளும் பிளிற துவங்கியதால், பார்வையாளர்கள் அச்சமடைந்தனர். வனத் துறையினர், கும்கி யானைகளை வரவழைத்து, சேரனை கட்டுப்படுத்தி அழைத்து சென்றனர். கோவிலில் நடந்த பூஜையில், குட்டி யானை "மசினி பூஜை செய்தது; மற்ற யானைகள், தும்பிக்கையை உயர்த்தி வணங்கின. பின், யானைகளுக்கு பொங்கல், கரும்பு, பழங்கள் வழங்கப்பட்டன.கள இயக்குனர் ரகுநாம் சிங் தலைமை வகித்தார். துணை இயக்குனர் அமீர் ஹாஜா, கால்நடை மருத்துவ விஜயராகவன், வனச்சரகர் புஷ்பாகரன் உட்பட வனத்துறையினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.