பதிவு செய்த நாள்
16
ஜன
2013
10:01
பழநி: தைப்பூசத்தையொட்டி ஐந்து நாட்களுக்கு மலை கோயிலில் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு கிடையாது. பழநி கோயிலில் தங்க ரதம், பக்தர்கள் தினந்தோறும் காணிக்கை செலுத்தி சுவாமி புறப்பாடு செய்வது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இரவு 7 மணிக்கு மேல் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். எத்தனை பக்தர்கள் தங்க ரத புறப்பாட்டிற்கு காணிக்கை செலுத்தியிருந்தாலும், ஒரே ஒரு முறை தான் வெளிப்பிரகாரத்தில் உலா வரும். தைப்பூசம் இம்மாதம் 21-ல் துவங்கி 30 வரை நடைபெறும். மலைகோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இம்மாதம், 25 முதல் 29 வரை தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு இருக்காது.
ரோப்கார் இயக்கம் தைப்பூசம் வரை இல்லை: பழநி கோயில் "ரோப்கார் இயக்குவது, மேலும் பத்து நாட்கள் தள்ளிப்போகும் நிலை உள்ளதால், மலைக்கோயிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தொடர் அவதிக்குள்ளாகின்றனர்.பராமரிப்பு பணிக்காக, பழநி கோயில்"ரோப்கார் இயக்கம் சென்ற வாரம் நிறுத்தப்பட்டது. அந்த பணி முடிந்து, ஜன., 9 ல், சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது, கீழ் தளத்தில் சப்தம் வந்ததால், பக்தர்களின் பயன்பாட்டிற்கு இயக்குவது தள்ளிவைக்கப்பட்டது."மெயின் பேரிங்கில் தேய்மானம் இருப்பது தெரியவந்தது. ஜெர்மனியில் இருந்து, 2003ல், கொண்டு வந்து பொருத்தப்பட்ட, அந்த "பேரிங்கை கழற்றும் பணி நடந்து வருகிறது. கீழ் தளத்தில், புதிய "ரோப்கார் ஸ்டேஷன் அமைப்பது போல், பணிகள் நடந்து வருகிறது."பேரிங் இணைக்கப்பட்டு, மீண்டும் "ரோப்கார் இயங்க துவங்குவதற்குள், தைப்பூசம் முடிந்துவிடும். இதனால், தைப்பூசத்திற்கு பழநி வரும், மலைப்பாதையில் ஏற முடியாத பக்தர்கள் சிரமப்படுகிறார்கள். கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் கூறியதாவது: ஜன., 9 ல் பராமரிப்பு பணி மேற்கொண்டபோது, "பேரிங் தேய்மானம் தெரிய வந்தது. பணிகள் முடிவடைய, மேலும் 10 நாட்கள் ஆகும்,என்றார்.