Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழங்கால யாத்ரீகர் கல்மண்டபம் ... பகவதி அம்மன் கோயில் திருவிழா: மஞ்சள் நீராட்டுடன் நிறைவு பகவதி அம்மன் கோயில் திருவிழா: மஞ்சள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெம்மாரா திருவிழாவில் யானை மிரண்டு ஓட்டம்: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நெம்மாரா திருவிழாவில் யானை மிரண்டு ஓட்டம்: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2026
04:04

பாலக்காடு: ​நெம்மாரா திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று காலை நடைபெற்ற அணிவகுப்பின் போது யானை மிரண்டதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற நெம்மாரா நெல்லிகுளங்கரை பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் பங்குனி மாதம் வேலா என்ற பெயரில் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று செண்டை மேளம் முழங்க யானைகள் அணிவகுத்து நின்று குடை மாற்றம், பிரமாண்ட வான வேடிக்கை என வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. ​இந்த நிலையில் திருவிழாவில் நிறைவு நாளான இன்று காலை 8 மணியளவில் செண்டை மேளம் முழங்க யானைகள் அணிவகுப்புடன் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது இந்நிகழ்வின் இடையே வைலாசேரி அர்ஜுனன் என்ற யானை திடீரென மிரண்டு ஓடியது. ​யானை மிரண்டு ஓடியதைக் கண்ட பக்தர்கள் அச்சத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். கூட்ட நெரிசலில் சிக்கியும், கீழே விழுந்தும் பலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, யானை பாகன்கள் மற்றும் யானை அடக்கும் குழுவினர் (Elephant Squad) இணைந்து யானையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாதுகாப்புக் கருதி அந்த யானையை ஊர்வலத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது. அதன் பிறகு, மற்ற மூன்று யானைகளைக் கொண்டு சடங்குகள் மற்றும் ஊர்வலம் நடத்தி முடிக்கப்பட்டது. அதேபோல் நேற்று கோவில் வளாகத்திற்குள் யானைகள் நின்றிருந்த போது, பட்டாசு வெடித்த சத்தத்தில் நாணு எழுத்தச்சன் சங்கரநாராயணன் என்ற மற்றொரு யானையும் மிரண்டு ஓட முயற்சி செய்தது. ஆனால், பாகன்கள் துரிதமாகச் செயல்பட்டு அந்த யானையை அங்கேயே கட்டிப்போட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar