ஒரு மனிதனின் குணத்தை அறிய உதவுவது நாக்கு. அதன் வலிமையால் வாழ்ந்தவர்களும், வீழ்ந்தவர்களும் உண்டு. நாக்கிற்கு மட்டுமே உண்ணுதல், பேசுதல் என இரண்டு வேலைகள் உண்டு. ஆனால் அவை இரண்டிலும் நிதானம் அவசியம். ஆம். அதிகமாக சாப்பிட்டால் உடல்நலம் கெடும். அதிகமாக பேசினால் மனநலம் கெடும். எனவே நாக்கை கட்டுப்படுத்து.